இன்றைய ராசி பலன்கள்

357

மேஷம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்நம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்

வரவு திருப்தி தரும் நாள். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
மிதுனம்

இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுபவிரயம் உண்டு. சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத் தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
கடகம்

வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டுப் பயணத்தில் ஆர்வம் காட்டு வீர்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். வி.ஐ.பி.க் களின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு திறமைமிக்கவர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். மாலை நேரம் மகிழ்ச்சி பயணம் உண்டு.

விருச்சிகம்

காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு
தனுசு

நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக் காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மீனம்

வளர்ச்சி கூடி வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்தி ணைவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.