இவர்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனை வரலாம், நீங்கள் எட்டு வடிவில் நடைபயிற்சி செய்ய வேண்டும்!

39

இவர்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனை வரலாம், நீங்கள் எட்டு வடிவில் நடைபயிற்சி செய்ய வேண்டும்!

ஆகஸ்ட் 05 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (05-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பிரமாண்டமான எண்ணங்கள் தோன்றும். நிறைய சாதிக்க தோன்றும். முதுகு தண்டுவட பிரச்சனைகள் வரலாம். முன்னேற்றமான நாள். சகோதர உறவுகள் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கும். புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்: உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. கடன் வாங்க வேண்டிய அவசியம் வரும். கடன் வாங்கினால் கடன் பெருகும் நிலை உண்டாகும். விஆர்எஸ் இப்போது வாங்க கூடாது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தன வருமானம் வரும். சுப காரிய செய்திகள் வரும். உள்நாட்டு வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மிதுனம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். ஸ்ரீ வரலட்சுமி விரதம் கிடைக்க செல்வ செழிப்பு உண்டாகும். மனைவி என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். டேட்டா சயின்ஸ் படித்தால் நன்றாக இருக்கும்.

கடகம்: மிக அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு மனை யோகம் உண்டு. வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

சிம்மம்: வெற்றிகரமான திருநாள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சகோதரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவரால் மனமகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலை குறித்து மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். எட்டு வடிவத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால் வாழ்க்கை பிரச்சனை சரியாகும். அக்கவுண்ட்ஸ் படித்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

கன்னி: தன லாபம் உண்டு. வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். உடல்நலன் குறித்து மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களது ஆலோசனை தேவை. கம்ப்யூட்டர் துறையில் வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: ஏராளமான நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சிக்குரிய நாள். நெருக்கடிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் துர்க்கையை சரணடைய வேண்டும். முதுகு வலி, கால் வலி பிரச்சனை வரலாம். தாம்பத்திய உறவில் பிரச்சனை வரலாம்.

விருச்சிகம்: ஹார்மோன் பிரச்சனை வரலாம். கர்ப்பபை கோளாறு உண்டாகலாம். ஆண்களாக இருந்தால் பிறப்பு உறுப்பில் பிரச்சனை வரலாம். விரை வீக்கம் சிக்கல் உண்டாக கூடும். ஜாதகப்படி அதற்குரிய பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். யாரையும் விமர்சிக்க கூடாது. உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பிஸினஸில் நல்ல முன்னேற்றம் உண்டு.

தனுசு: தொட்டதெல்லாம் வெற்றியடையும் அற்புதமான நாள். பைரவர் வழிபாடு ஆனந்தத்தை தரும். வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். திருவையாறு ஐயாரப்பனுக்கு புனுகுசட்டை சாற்றினால் மிகப்பெரிய வெற்றி வரும். தோல்வியாதி இருந்தாலும் ஐயாரப்பனை வழிபட வேண்டும். தன லாபம் உண்டு. தைரியம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

மகரம்: இனிய நாள். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வரும். வாய்வு தொந்தரவு வரலாம். பணப்புழகத்தில் தடை ஏற்பட்டாலும் பணம் வரும். வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்: மிக மிக மகிழ்ச்சிக்குரிய நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். எதிர்பார்க்கும் நபர்கள் வருவார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நட்புகள் கிடைக்கும்.

மீனம்: குருவருளும், திருவருளும் உண்டு. அரசு வழி காரியங்கள் ஆதரவாக முடியும். உடல் நலன் பிரச்சனை வரலாம். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வம்பு, வழக்குகள் வந்தால் ஒதுங்கி செல்ல வேண்டும்.