இவர்களுக்கு வெளிநாட்டு வேலை அமையும்!

64

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் மிதுன ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்… மிகப்பெரிய ஏற்றங்கள் உருவாகக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையப் போகிறது. ராசிநாதனின் வல்லமை கடைசி வாரத்தில் மிகப்பெரிதாக பெருகப்போகிறது. இந்த மாதத்தின் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது உங்களது தன ஸ்தானத்தில் ராசி நாதனுடன் சூரிய பகவான் மாதத்தில் தொடக்கத்தில் இருக்கிறார். திரவிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க: மிதுன ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் – வீடியோ!

அஷ்டத்தில் சனி பகவான், பாக்யத்தில் குரு பகவான், லாபத்தில் சந்திர பகவான், விரையத்தில் ராகு பகவான் என்று மாதம் துவங்குகிறது. இந்த மாதம் 17 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 6 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசிக்குள், 24 ஆம் தேதி கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். சுக்கிர பகவான் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் செல்கிறார்.

இதையும் படிங்க: தனுசு ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

கிரக நிலைகளின் கணிப்பின் படி, இந்த மாதம் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. பணப்புழக்கம் இருக்கும். எழுத்தாளர்களின் வல்லமை பெருகும். எழுதும் எழுத்தில் எதிர்மறை என்று எதுவும் இருக்கக் கூடாது. எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று அனைவரது வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

மாணவர்களுக்கு குழப்பம் இருந்து தெளிவாகும், 24 ஆம் தேதிக்குப் பிறகு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு 17 ஆம் தேதிக்குப் பிறகு மிகப்பெரிய ஏற்றம் வரும். அதுவரையில் சின்ன சின்ன குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

ரிஷப ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் அமையும். மருத்துவ கல்வியில் மாணவர்களுக்கு மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும். வேலை பறி போனவர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை அமையும். இசை துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் காத்துக் கொண்டிருக்கிறது.