உங்களது நெருக்கடியை சமாளிக்க நிதானமாக செயல்பட வேண்டும்!

60

உங்களது நெருக்கடியை சமாளிக்க நிதானமாக செயல்பட வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 29 ஆம் தேதியான இன்றைய (29-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: தொட்ட து துலங்கும் அற்புதமான நாள். அம்பாளின் அனுக்கிரகம் கிடைக்கும். கல்வி, தொழில், புதிய வேலை ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷபம்: பொறுமையாக இருக்க வேண்டும். நிதானத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி உண்டு. அலுவலகத்தில், குடும்பத்தில், வெளி வட்டாரத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்: அற்புதமான நாள். தன லாபம் உண்டு. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தாருடன் இந்த நாளை மகிழ்ச்சியாக செலவழிப்பீர்கள்.

கடகம்: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வம்பு, வழக்குகள் சமாதானமாக முடியும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்: புண்ணியங்கள் நம்மை காப்பாற்றும். தான, தர்மங்கள் செய்ய வேண்டும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். ஈஎன்டி பிரச்சனை இருக்கலாம்.

கன்னி: வீடு கட்டும் யோகம் உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டு. தன லாபம் கூடும். வியாபாரம் அளவாக நடைபெறும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: உடல் நல தொந்தரவுகள் இருக்கும். மூத்த சகோதரர்களின் உடல் நலனில் பாதிப்பு வரலாம். வதந்திகளை நம்பக் கூடாது. பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வந்து சரியாகும்.

விருச்சிகம்: தனம் தரும் நாள். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் கூடும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பாக்கியம் குறித்து நல்ல தகவல் வரும்.

தனுசு: உடல் நலனில் அக்கறை தேவை. அலுவலகத்தில் நெருக்கடி இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டும். இந்த நாள் நல்ல நாள்.

மகரம்: மாற்றங்கள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய் நாடு திரும்பும் வாய்ப்பு வரும். கணவன் மனைவி உறவில் சலசலப்பு உண்டாகும்.

கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும் அற்புதமான நாள். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். அப்பா வழி முன்னோர்களின் ஆசி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். தொலைத்தூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.