உங்களால் மற்றவர்களுக்கு நன்மை உண்டு!

88

உங்களால் மற்றவர்களுக்கு நன்மை உண்டு!

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 31 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம்: எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் புகழ் பெறுவீர்கள். அமைச்சுப் பணியாளர்களுக்கு இந்த நாள் வெற்றியைத் தரும். ஆசிரியர்களுக்கு வெற்றி வாகை சூடும். புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும். வியாபாரத் தொடர்பு விரிவடையும். பெண்கள் தங்களது உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நாள். ஆனால், ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். உடல் நலனிலும் நெருக்கடி இருக்கும். வயதில் பெரியவர்களுக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் வரும். சுபீட்சமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மிதுனம்: இந்த நாளில் அலப்பறிய நன்மைகள் நடக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும். வீட்டு பராமரிப்பு, பிள்ளைகளின் நன்மைகள், வண்டி வாகனம் வாங்குவது போன்றவற்றிற்கு செலவு வரும். உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் மிகுந்த நன்மை உண்டு.

கடகம்: ஏராளமான வெற்றிகள் தேடி வரும் நாள். ஆகச்சிறந்த வெற்றிகள் உண்டு. ஒரு சிலர் செய்யும் காரியங்கள் பிறருக்கு வெற்றியாக முடியும். தன லாபம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: வியாபாரக் கனவுகள் நினவாகும். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முயற்சி வெற்றியைத் தரும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்களுக்கு வெற்றிகரமான நாள். செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உடன் இருப்பவர்களால் தொல்லை உண்டு.

கன்னி: பாக்கியமான நாள். வேலை உயர்வு குறித்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும் நாள். மூத்தவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டு. வியாபாரம் செழிக்கும்.

துலாம்: நிதானம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது.

விருச்சிகம்: நல்லவொரு மகிழ்ச்சியான நாள். கல்யாண யோகம் கூடி வரும் நாள். வியாபாரத்தில் வளர்ச்சி காணும் நாள். கல்வியில் நல்ல முன்னேற்றம் காண வேண்டிய நாள்.

தனுசு: வெற்றிகள் பெருகும் நாள். வியாபாரிகளுக்கு அயல்நாட்டு தொடர்பு கிடைக்கும். அரசு ஆவணங்களை பெறுபவர்கள் இன்று முயற்சிக்கலாம். நீங்கள் செய்யும் செயல்கள் பிறருக்கு சாதகமாக அமையும். தன லாபம் உண்டு.

மகரம்: எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும். தொலைதூர பயணங்கள் வெற்றி பெறும். வியாபாரத் தொடர்புகள் விரிவடையும் நாள். கல்வி வளர்ச்சி அமையும் நாள். தன லாபம் உண்டு.

கும்பம்: இதமான, பதமான வெற்றிகள் உண்டு. விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் உண்டு. சகல காரியங்களும் அனுகூலமாக முடியும். நண்பர்களால் நன்மைகள் உண்டு.

மீனம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நாள். தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரால் நன்மைகள் உண்டு. பேச்சில் வெற்றி காண்பீர்கள். எழுத்தும் முயற்சி வெற்றி பெறும். உடல் நலனில் அக்கறை தேவை.

https://www.youtube.com/watch?v=WctjaYOuLRY