உங்களுக்கு மாற்று மதத்தை சேர்ந்தவர்களின் உதவி கிடைக்கும்!

33

உங்களுக்கு மாற்று மதத்தை சேர்ந்தவர்களின் உதவி கிடைக்கும்!

ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (13-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வாழ்க்கையில் 100 சதவிகித வெற்றிக்கு குதிரைகள் பட்த்தை வாங்கி வைத்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அற்புதமான நாள். குடும்ப வாழ்க்கையில் வெற்றி உண்டு.

ரிஷபம்: நல்ல வேலை கிடைக்கும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள். வெளிநாட்டு வாய்ப்பும் கூடி வரும். கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிடைக்கும் யோகம் உண்டு. தொழில் முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம்: அற்புதமான நாள். எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். தொட்டது துலங்கும். வியாபாரத் தொடர்பு விரிவடையும். மகிழ்ச்சிக்குரிய நாள்.

கடகம்: நினைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். கண்களுக்கு நல்ல பயிற்சி செய்ய வேண்டும். குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சிம்மம்: மிக முன்னேற்றமான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். பொதுமக்கள் துறையில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாகதோஷம் ஏற்படும்.

கன்னி: ஒரு அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. தேவையான கடனுதவி கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மன மகிழ்ச்சியான சூழல் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் ஈடுபாடு காட்டும். தண்டனைகளுக்கு உள்ளாவீர்கள். இறைவழிபாடு ஆனந்தம் தரும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: அருமையான நாள். எதிரிகளை வெல்லக் கூடிய நாள். கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள். தாயாரது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நெஞ்சக நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: நண்பர்களால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்வார்கள். அன்பு தான் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். அன்பு ஒன்றே உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

மகரம்: தன லாபம் உண்டு. மருத்துவ செலவு இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. இறைவழிபாடு நிம்மதி தரும். வியாபாரத்தில் அளவான லாபம் உண்டு.

கும்பம்: இனிய நாள். காரிய வெற்றி உண்டாகும். துர்கை வழிபாடு செய்ய வேண்டும். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் நீங்கும். எல்லா நன்மைகளும் வரும். முதுகு தண்டுவடங்களில் வழி வரும். உடல் அசதியும் ஏற்படலாம். அலுவலக நெருக்கடி உண்டு.

மீனம்: பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேரும் நாள். நல்ல உணவு கிடைக்கும் சூழல் உண்டு. தொழிலாளர்களுக்கும், முதலாளிக்கும் உள்ள விரோதம் மறையும்.