உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்!

57

உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்!

நவம்பர் மாதம் 25 ஆம் தேதியான இன்றைய (25-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 25 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: பொறுமையாக இருக்க வேண்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு தன லாபம் உண்டு.

ரிஷபம்: எதையும் யோசித்து செய்ய வேண்டும். குடும்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் வரும். சுய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மிதுனம்: தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியம் வெற்றியாக முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வரவு உண்டு. குடும்பத்தில் நல்ல சூழல் உருவாகும்.

கடகம்: கவனக் குறைவு ஏற்படும். கால் பகுதிகளில் பாதிப்பு வரலாம். கருத்து வேறுபாடு உண்டாகும்.

சிம்மம்: நம்பிக்கை மோசடி நடக்க வாய்ப்பு உண்டு. தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பைரவர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மிகச் சிறந்த நாளாக அமையும். புதிய தொழில் தொடங்குவீர்கள். நிறைந்த தன லாபம் உண்டு. குடும்ப பிரச்சனை நிவர்த்தியாகும்.

துலாம்: அருமையான நாள். மன அழுத்தம் இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தன லாபம் உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். வயிற்று வலி பிரச்சனை வரலாம். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

விருச்சிகம்: ஏராளமான காரியங்கள் விரைவாக நடக்கும். அலுவலக பிரச்சனை சரியாகும். திடீர் அதிர்ஷ்டம் கூடி வரும். தன லாபம் இருக்கும்.

தனுசு: அருமையான வெற்றிகரமான ஒரு நாள். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும். எல்லா காரியங்களும் வெற்றி பெறும்.

மகரம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பயணங்களால் நன்மை உண்டு. நெஞ்சக நோய் இருந்தால் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: இனிய நாள். ஏராளமான நன்மைகள் நடக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மீனம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.