உணவில் உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்!

104

உணவில் உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… மார்ச் 21 ஆம் தேதியான இன்றைய (21-03-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அலுவலகத்தில் சோதனை வரலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத் தடை விலகும். வாக்கு, வாதங்களை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: தொழில் முயற்சி பிரமாண்டமாக இருக்கும். உளுந்து அதிகளவில் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரும்புல் சூஸ் குடிக்க வேண்டும். தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். குழந்தைகள் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். நன்மைகள் அதிகம் நடக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். நடைபாதை வியாபாரிகளுக்கு இருந்த பிரச்சனைகள் விலகும். வழக்கறிஞர்களுக்கு நல்ல நாள்.

கடகம்: சந்தோஷமான அனுபவங்கள் நிறைந்த நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையிலிருந்த தடைகள் விலகும். கல்யாண விஷயங்கள் குறித்து நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும்.

சிம்மம்: அதிர்ஷ்டகரமான நல்ல நாள். வேலையில் இருந்த இன்னல்கள் தீரும். வேலையில் நல்ல பதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.

கன்னி: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மகத்துவமான காலகட்டம். வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். அமைதியாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் நிதானம் தேவை.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நல்ல நாள். தாயன்பு அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைகள் விலகும். சரஸ்வதி வழிபாடு வெற்றி தரும். வியாபாரிகளுக்கு நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: மிக மிக அதிர்ஷ்டகரமான நாள். வெளிநாட்டு செய்தி வரும். வியாபாரத்தில் தனித்துவம் வெளிப்படும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு: அருமையான நாள். வாழ்க்கையில் எதிர்பார்க்கும் அனைத்தும் வெற்றியாகும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள். தாயிடம் ஆசிர்வாதம் வாங்கும் நாள்.

மகரம்: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்த பதவி கிடைக்கும். வியாபாரத்தில் பிரமாண்ட வெற்றிகள் தேடி வரும்.

கும்பம்: பாக்கியமான நாள். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு சாதுர்யமான நாள்.

மீனம்: முதலீடு அதிகரிக்கும். இந்த நாளில் பொறுமையாக இருக்க வேண்டும். மனதில் பக்குவம் வேண்டும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.