உயரதிகாரிகள் தவறு செய்தால் தண்டனை உண்டு: கும்பம் ராசி செப்டம்பர் மாத பலன்!

77
உயரதிகாரிகள் தவறு செய்தால் தண்டனை உண்டு: கும்பம் ராசி செப்டம்பர் மாத பலன்!

செப்டம்பர் மாத ராசி பலன் 2021….

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கும்பம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்…

கும்பம் ராசி அன்பர்களே…

பொறுமைசாலியாக இருந்தாலும் உங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இடமாற்றம் தரக்கூடிய ஒரு காலகட்டம். சொந்தம், பந்தம், உறவினர்கள் பற்றியும், நம்மைப் பற்றியும் நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு மாதம். திடீர் செலவுகள் இருக்கும். சுபச் செலவுகளாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல விஷயத்திற்காக செலவு செய்ய வேண்டும். பெரியளவில் செலவு வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கும்பம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில் உருவாகும். சிலருக்கு கால் பாதங்களில் பிரச்சனை இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். குறிப்பாக பழமுதிர் சோலை முருகப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். கும்ப ராசிக்காரர்களுக்கு பெருமாள் வழிபாடு, முருகன் வழிபாடு எல்லாம் நன்மைகள் உண்டாகும்.

பெண்களுக்கு ஒரு உயர்வான காலகட்டம். அலுவலகத்தில் முன்னேற்றம், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சமூக வலைதளத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய பதிவுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

நீண்ட தூர பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. இந்த காலகட்டத்தில் நிறைய செலவுகள் இருந்தாலும் அதிகளவில் பணம் வரும். அரசுத் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளலாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவறுகள் செய்தால் இப்பொழுது தண்டனை வந்து சேரும். வயிறு தொடர்பான பிரச்சனை வரும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழலும் இருக்கிறது. ஆகையால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வியாபாரம் தொடர்பாக தவறான நபர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். நெருங்கியவர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்யும் அமைப்பு உண்டு. எந்தவொரு முடிவும் ஏமாந்து எடுத்துவிட வேண்டாம். சில நொடிகளில் ஏமாந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த ஆபரணங்களில் கூடுதலாக கவனம் செலுத்திக் கொள்ளுங்கள். விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லும் போது எச்சரியாக இருந்துக்கோங்க.

இருக்கும் வேலையை விட்டு விடாதீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். எந்த வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு என்று வேலை வாய்ப்பு அமையும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி உண்டாகும். நல்ல நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.