உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி!

91

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி!

ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம்: மனதில் தைரியமான எண்ணங்கள் தோன்றும். துர்க்கை அம்மன் வழிபாடு சிறந்தது. பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை வரும். உடல் நலனில் கூடுதம் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டகரமான நாள்.

ரிஷபம்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீதான் நீதிபதி என்பது கவிஞர் வாக்கு. பலரது விமர்சனங்களை ஏற்க வேண்டி வரும். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. உயரதிகாரிகளின் தொந்தரவு இருக்கும். மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு பெருகும். வியாபாரத்தில் அக்கறை தேவை.

மிதுனம்: சிவபெருமானை வழிபட வேண்டும். நோய்களால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மகா மிருத்யுஞ்சய மந்திரம் சொல்ல வேண்டும். குடும்பத்தினர் உடல் நலனில் பிரச்சனை வரும். வியாபாரத்தில் பேரம் பேசி நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள்.

கடகம்: எட்டாத உயரத்தில் நிலவை வைத்தது யாரு? மனது அலை பாயும் நேரம். சில நேரம் தவறான முடிவுகள் எடுக்க தோன்றும். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: மிகப்பெரிய வெற்றிகள் வரும். சிறு சிறு உடல் நலக் குறைபாடுகள் வரும். வேலையில் சிறு நெருக்கடிகள் இருக்கும். கடவுளின் சோதனை இருக்கும். கைவிட மாட்டார். சகல விஷயங்களும் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கறை காட்டுவீர்கள்.

கன்னி: வெளிநாட்டில் பலரது வேலை வாய்ப்பு கிடைக்கும். அப்பாவின் உடல் நலனில் கன்னி ராசிக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நன்மையான நாள். பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

துலாம்: அருமையான நாள். துர்க்கை வழிபாடு ஆனந்தம் தரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்யலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

விருச்சிகம்: எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். கல்வி, வியாபாரம், பணம் கொடுக்கல், வாங்கல் என்று அனைத்திலும் வெற்றி உண்டு. தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: உடல் நலனில் கவனம் வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது. தொலை தூர தகவல் வந்து சேரும். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கூடி வரும். வியாபாரத்தில் வெற்றி உண்டு.

மகரம்: நினைவுகள் திரும்ப வரும். நண்பர்களை சந்திப்பீர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள் புகழ் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.

கும்பம்: பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். மூத்த குடிமக்களுக்கு வாந்தி, மயக்கம் என்று உடல் நலனில் பாதிப்பு வரும். வியாபாரத்தில் ஒரு படபடப்பு இருக்கும். வெற்றி செய்திகள் தேடி வரும். கூடுதல் லாபம் உண்டு. நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

மீனம்: நிறைய மாற்றங்கள் வரும் நாள். வியாபாரங்கள் தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வியாபாரம் ஆரம்பிக்கலாம், வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தன லாபம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். சகல காரியங்களும் அனுகூலமாக முடியும்.