உழைப்பால் உயரக் கூடிய ஒரு நாள், வேலைக்கு முயற்சிக்கலாம்!

150
செல்வாக்கு, புகழ் உண்டாகும்

உழைப்பால் உயரக் கூடிய ஒரு நாள், வேலைக்கு முயற்சிக்கலாம்!

ஜூன் 26 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (26-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: உழைப்பால் உயரக் கூடிய ஒரு நாள். பொருளாதார மேம்பாடு அடையும். பெருமாள் வழிபாடு ஆனந்தம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்: மகிழ்ச்சிகரமான சூழல் அமையும். தொடை பகுதிகளில் பிரச்சனை ஏற்படும். அவமானம் கூட ஏற்படலாம். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மிதுனம்: ஆகச்சிறந்த நாள். புதுமையான விசயங்களில் எல்லாம் மனம் ஈடுபடும். பொழுதுபோக்கு விசயங்களில் மனம் ஈடுபடும். நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்: அற்புதமான நாள். சகோதர வழியில் நல்ல செய்தி வரும். சுதர்சன சக்கரத்தை வழிபட வேண்டும். சுயமாக முடிவு எடுக்க வேண்டும்.

சிம்மம்: வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். பொறுமையாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு இருக்கும்.

கன்னி: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிரச்சனைகள் எல்லாம் தீரும். மனக்கஷ்டம் விலகும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: ஆகச்சிறந்த நாள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும். விஷ்ணு சகஸ்ர நாமம் படிக்க வேண்டும்.

விருச்சிகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தெய்வ அனுக்கிரகம் உண்டு. மனம் அதிர்ஷ்டத்தை நம்பும். ஏராளமான நன்மைகள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

தனுசு: மிக இனிமையான நாள். வேலைவாய்ப்புக்கு முயற்சிக்கலாம். உடல் நலனில் அக்கறை தேவை. பெருமாள் வழிபாடு ஆனந்தம் தரும். பிள்ளைகளுக்கு வளர்ச்சி உண்டு. யாருடனும் சண்டை, சச்சரவு கூடாது.

மகரம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலனில் அக்கறை தேவை. நெஞ்சக நோய் இருக்கும். தெய்வ வழிபாடு மேற்கொள்ள சோதனைகள் விலகும்.

கும்பம்: அருமையான நாள். வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். மாடி வீடு வாங்க வேண்டும் என்று சிந்தனைகள் பெருகும். தொட்டது துலங்கும் ஒரு நாள்.

மீனம்: மன தைரியம் பெருகும். சிறு தூர பயணங்கள் வெற்றி பயணங்களால் அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.