எதிரிகளை வெல்வீர்கள்!

89

எதிரிகளை வெல்வீர்கள்!

அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியான இன்றைய (12-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 12 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்களை தாங்கி வருவீர்கள். புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான ஆலோசனை தேவைப்படும். தன லாபம் உண்டாகும்.

கும்பம்: எதிரிகளை வெல்லக் கூடிய தன்மை உண்டாகும். உயர் பதவிகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி. வேலை வாய்ப்பு அமையும். வெற்றிகள் குவியும். போட்டி, பந்தயங்களை சமாளிப்பீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும்.

மகரம்: இனிய நாள். ஏராளமான நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு உயர்வான செய்தி தேடி வரும். மன மகிழ்ச்சியான சூழல் அமையும். தன வரவு உண்டு.

தனுசு: தன வரவு, பொருள் வரவு உண்டாகும். பதற்றம் இருக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு மிகச்சிறந்த நாள். சுபச் செய்திகள் வந்து சேரும்.

விருச்சிகம்: யோசித்து பார்த்து செயல்பட வேண்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. பண விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. வம்பு, வழக்குகள் மறையும். தன லாபம் உண்டு.

துலாம்: வியாபாரத்தில் சிறப்பாக செயல்படும் அற்புதமான நாள். செல்வ வளம் பெருகும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன லாபம் அதிகரிக்கும். திருமண விஷயங்கள் கைக்கொடுக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வீடு, அலுவலகத்தை அழகுபடுத்த நினைப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபார நுணுக்கங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியும். வெற்றிகள் குவியும். எதிர்பார்க்கும் காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தன லாபம் உண்டு. தொட்ட காரியங்கள் துலங்கும்.

கடகம்: இனிமையான அனுபவங்கள் தரக்கூடிய நல்லதொரு நாள். சேமிப்பு உங்கள் குடும்பத்தினருக்கு பயன்படும். வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாறும் சூழல் ஏற்படும். நல்ல தனலாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்: உடல் நலனில் கூடுதல் அக்கறை வேண்டும். எதிர்பார்க்கும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு தேவையான கடனுதவி கிடைக்கும். சில மாற்றங்கள் வரும். மகிழ்ச்சியான சூழல் அமையும். நல்ல தனலாபம் உண்டு.

ரிஷபம்: உழைப்புக்கு வெற்றி உண்டு. சுப காரியங்கள் நடக்கும். விநாயகப் பெருமான் வழிபாடு வெற்றியைத் தரும். பெண்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அயல்நாட்டு வாய்ப்பு தேடி வரும்.

மேஷம்: வெற்றிகள் தேடி வரும் நாள். சில மன சலனங்கள், மன பயம் இருக்கும். பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. மாலை பொழுது நல்ல பொழுது. புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் முயற்சி தொடர்பான பேச்சுக்கள் நடத்துவீர்கள்.