எப்போதும் உண்மையை மட்டுமே பேச வேண்டும்: சிம்மம்!

117

எப்போதும் உண்மையை மட்டுமே பேச வேண்டும்: சிம்மம்!

லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும்.

ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.

அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அதன் படி, தற்போது சிம்ம ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிம்ம ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

  1. நேர்காணல், பிசினஸ் மீட்டிங் ஆகியவற்றிற்கு செல்லும் போது சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
  2. ஒரு செம்பு நாணயம் அல்லது டாலர் ஒன்றை ஒரு நூலில் கோர்த்து அதனை கழுத்தில் அணிந்து கொண்டால் செல்வம், தொழில் மற்றும் வேலையில் உயர்வு தரும்.
  3. கண்பார்வையற்ற 10 பேருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இனிப்பு வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
  4. வசதிக்கேற்ப ஏதேனும் முதியோர் இல்லம், அனாதைகள் இல்லம் சென்று அரிசி, பால் அல்லது ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம்.
  5. மது, மாமிசம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
  6. எப்போதும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். வாக்குறுதியை கொடுக்கும் முன்பு நன்கு யோசிக்க வேண்டும். அதன் பின் அதனை நிறைவேற்ற வேண்டும்.
  7. பித்ரு தோஷம் நீங்க, ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 7 வகை தானியங்களை வாங்கி அதனை ஒரு சிகப்பு துணியில் கட்டி இரவில் தூங்கும் போது தலைக்கடியில் வைத்து தூங்க வேண்டும். மறுநாள் காலையில், அந்த தானியங்களை எறும்புகளுக்கு தீனியாக கொடுத்தால் தோஷம் நீங்கும். சுப காரியத் தடைகள் நீங்கும்.
  8. மனைவியின் சகோதரர்கள், மருமகன்கள், தங்கை மற்றும் அக்காள் மகன்கள் என்று அனைவருடனும் எப்போதும் நல்லுறவைப் பேண வேண்டும்.
  9. யாராவது அன்பளிப்பாக ஏதாவது கொடுத்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதாவது ஒரு பதில் மரியாதை செய்வது உங்களை சமூகத்தில் உயர்த்தும்.