எல்லாமே வெற்றி தான்: தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன் 2021!

347

எல்லாமே வெற்றி தான்: தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் தனுசு ராசி – வீடியோ தொகுப்பு!

தனுசு ராசிக்கு அதிபதியே குரு பகவான் தான். தனது சொந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் எப்போதும் நன்மையைத் தான் செய்வார்கள். அப்படித்தான் இந்த குரு பகவானும் நன்மையைச் செய்யப் போகிறார். இந்த தனுசு ராசிக்கு 1ஆம் இடத்திற்கும் 4 ஆம் இடத்திற்கும் அதிபதியாக கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார். இதுனால் வரையில் மகர ராசியில் நீச்சமாக இருந்த குரு பகவான், தனது பலத்தை வெளிக்காட்ட முடியாத நிலையில் இருந்தார்.

தற்போது இந்த குருப்பெயர்ச்சியில் உங்களது ராசிக்கு 3ஆவது இடமான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜாதகத்தில் 3ஆவது ஸ்தானாதிபதி, 6ஆவது இட த்தில் அமர்ந்தால் தாம்பத்ய உறவில் பிரச்சனை வரும். தைரியமின்மை, எதிரிகளைக் கண்டால் பயம் என்று எல்லாமே இருக்கும். https://www.youtube.com/watch?v=U-VKVd8cO9k

அந்த 3ஆவது ஸ்தானம் நன்றாக இருந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த 3ஆவது ஸ்தானத்தில் தான் தற்போது குரு வந்து அமர்கிறார். அற்புதமான ஒரு காலகட்டமாக இருக்கும். தாம்பத்திய உறவு இல்லை என்பதற்காகவே பிரிந்திருந்த குடும்பங்கள் எத்தனையோ இருக்கிறது. திருமணமான முதல் நாளிலேயே பிரிந்தவர்களும் உண்டு.

அப்படி ஒரு குடும்பத்தில் தாம்பத்திய உறவு காரணமாக பிரிந்தவர்களின் குழப்பங்கள் தீரும் ஒரு காலகட்டம். குரு பகவான் 7ஆவது இடத்தை பார்க்கிறார். அந்த 7ஆவது இடம் வாழ்க்கைத் துணையை குறிப்பது. கணவன் மனைவிக்கிடையில் ஒரு புரிதல், ஒற்றுமை உண்டாகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செல்வார்கள். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொள்வார்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையப் போகிறது. எந்தெந்த குடும்பத்தில் கணவன் மனைவி பிரிந்திருந்தார்களோ அந்தந்த குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கல்யாண யோகம் ஏற்படும். இதுனால் வரையில் இருந்த திருமணத் தடை நீங்கும். https://www.youtube.com/watch?v=U-VKVd8cO9k

ஏற்கனவே பார்த்த திருமண வரனாக இருந்தாலும் கூட இப்பொழுது திடீரென்று திருமணம் நடந்து முடியும். இன்னும் ஒரு சில இடங்களில் காசு, பணம் இல்லையென்றாலும் வசதியான இடத்திலிருந்து திருமண வரன் வரும். திருமணத்திற்கு என்ன தடை இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுவித்து குரு பகவான் உங்களுக்கு நன்மையளிக்கப் போகிறார். தொழில் விஷயத்தில் உங்களுக்கும், கூட்டாளிக்கும் இருந்த பிரச்சனை எல்லாம் சரியாகும். பழைய கூட்டாளியாக இருந்தாலும் உங்களுடன் தான் தொழிலை தொடர்ந்து செய்வார். புதிய கூட்டாளிகள் கூட வருவார்கள். தொழில் நன்றாக இருக்கும். https://www.youtube.com/watch?v=U-VKVd8cO9k

நீதிமன்றம், குற்றம், வம்பு, வழக்கு பிரச்சனைகள் எல்லாம் இப்பொழுது நிவர்த்தியாகும். நல்ல தீர்ப்பு கிடைக்கும். அந்த தீர்ப்புகளினால் குடும்பங்கள் நிம்மதியடையும். தந்தையின் உடல் நலனில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சீராகும். தந்தை மகன் பிரச்சனை சரியாகும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். கல்வியில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் ஒரு அற்புதமான காலகட்டம். மாணவர்கள் உயர்கல்வியை அருமையாக படித்து முடிப்பீர்கள்.

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். அதே போன்று வெளிநாடில் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்பு கூடி வரும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கையில் சந்தோஷமான ஒரு நிலை வரும். வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். குடும்பத்தில் நல்ல குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப காரியங்கள் நடைபெறும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான ஒரு அற்புதமான காலகட்டம். மூத்த சகோதர, சகோதரிகளுக்கிடையில் இருந்த பிரச்சனை விலகும். மாணவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மறக்க முடியாத மகிழ்ச்சியான சம்பவங்களை அள்ளித்தரப் போகிறது. இது தவிர்த்து ஜாதக ரீதியாக இன்னும் பல அற்புதங்கள் நிகழும். அதனை உங்கள் ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=U-VKVd8cO9k