எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்க நாக தெய்வ வழிபாடு!

97

எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்க நாக தெய்வ வழிபாடு!

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியான இன்றைய (15-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 15 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இனிய நாள். குடும்ப அமைதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கால்வலி வந்து நிவர்த்தியாகும். நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: தொட்டது எல்லாம் துலங்கும். மனைவியால் நன்மை. கருத்து வேறுபாடு வரும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

மகரம்: வண்டி, வாகனங்கள் வாங்கும் ஆசை வரும். கணவன் – மனைவி உறவில் மனக்கசப்புகள் வரும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தன வரவு உண்டு. அளவான நன்மை உண்டு.

தனுசு: இனிய நாள். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். குரு வழிபாடு மேற்கொள்ள வேண்டும். யாருடைய அந்தரங்க விஷங்களிலும் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: நாக தெய்வ வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சியாக இந்த நாளை சமாளிப்பீர்கள்.

துலாம்: பெண் தெய்வ வழிபாட்டால் வாழ்க்கை உயரும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அந்தரங்க வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளத்தில் கவனம் வேண்டும். குடும்ப முன்னேற்றம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டுத் துறை வீரர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்: பண வரவு நோக்கி மனம் செல்லும். குடும்பத்தின் ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. பயணங்களில் கவனம் தேவை.

கடகம்: வளர்ச்சியான சூழல் ஏற்படும். மகான்களின் தொடர்பு ஏற்படும். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: காரியங்களில் பொறுமை தேவை. சந்திராஷ்டமம் என்பதால் பொறுமை. யாரையும் குறை சொல்லக் கூடாது. தன வரவு உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மூத்தவர்களால் குடும்பத்தில் நன்மைகள் உண்டு.

ரிஷபம்: செயல்களில் அதிக கவனம் வேண்டும். நல்ல நாள். சுகமான நாள். உடல் நலனில் அக்கறை வேண்டும். அளவான நன்மைகள் உண்டு.

மேஷம்: இதமான நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். செல்வம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். பிறரது அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது. https://www.youtube.com/watch?v=JY9CrUEAmdA