எல்லா நன்மைகளும் பெற சரஸ்வதி தேவி வழிபாடு!

101

எல்லா நன்மைகளும் பெற சரஸ்வதி தேவி வழிபாடு!

அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியான இன்றைய (14-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 14 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: படிப்பு முக்கியம். கல்விக்கு தாயாகிய சரஸ்வதிக்கு திருநாள். எல்லா நன்மைகளும் உண்டாக சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். கால்வலி வந்து நிவர்த்தியாகும். நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: ஒழுக்கம் இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. பொறுமையாக செயல்பட வேண்டும். மிகுந்த மேன்மை உண்டாகும். தன வரவு உண்டு. வியாபார ரீதியில் அளவான நன்மை உண்டாகும்.

மகரம்: இனிய நாள். நீங்கள் யாருக்காக எதிர்பார்த்தீர்களோ, அவர்களே உங்களை தேடி வரும் ஒரு நாள். குல தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் உண்டு. மிக சிறப்பான ஒரு நாளாக இந்த நாள் அமையும்.

தனுசு: எதிலும் உண்மை தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும். புரளி பேசும் உலகம் இது. யார், நம்மைப் பற்றி புரளி பேசுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புறம் பேசுபவர்களை நம்பக் கூடாது. நல்ல நட்பு, நல்ல உறவுகளை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போடலாம். தன வரவு உண்டு. உடல் நலனில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்: மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்க்கும் காரியம் வந்து சேரும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் நல்ல நாள்.

துலாம்: வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான அமைப்பு உண்டு. சகலகலாவல்லி மாலை சொல்லிக் கொண்டே வந்தால், பள்ளி, கல்லூரியில் முதலிடம் பெறலாம். மன மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நல்ல நாள். சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். கைகளில் பிரச்சனை வரும். வருமானம் பெருகும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து குவியும். தன லாபம் உண்டு. தொழில் மேன்மை உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரது அந்தரங்க காரியங்களில் தலையிடக் கூடாது.

கடகம்: இதமான ஒரு நாள். தன வரவு உண்டு. வாழ்க்கை பிரகாசிக்கும். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். கண், மூக்கு, தொண்டை பகுதியில் பிரச்சனை வரலாம்.

மிதுனம்: எதையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்யலாம். எல்லா காரியங்களும் விரைவாகவே நடக்கும். பணம், கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

ரிஷபம்: மனதில் பதற்றம், படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். கோபத்தை தவிர்க்க வேண்டும். நெருக்கமானவர்களை உங்களது கோபம் பிரித்துவிடும். தன வரவு வரும். பிறரது அந்தரங்க காரியங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மேஷம்: தான, தர்மங்கள் செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். தெளிவான சிந்தனை பிறக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சரஸ்வதி கடாட்சம் பெருகும் நாள். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. https://www.youtube.com/watch?v=stEX4l_WMKs