ஒரு வழியா கடன் பிரச்சனை தீர்ந்தது என்று சந்தோஷப் படும் நாள்!

78

ஒரு வழியா கடன் பிரச்சனை தீர்ந்தது என்று சந்தோஷப் படும் நாள்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 24 ஆம் தேதியான இன்றைய (24-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும். கட்டங்கள், பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் நன்மைகள் உண்டு. தோல் பிரச்சனை இருக்கும். குல தெய்வத்தை வழிபட வேண்டும். தன வரவு உயரும்.

ரிஷபம்: மனம் வருத்தம் இருக்கும். முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஞாபகத்திறன் பெருகும். புதியவற்றை கற்றுக் கொள்ள ஆர்வம் பெருகும். பிள்ளைகளால் நன்மை உண்டு.

மிதுனம்: கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம். குடும்ப நலன் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு. குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெற்றிகள் பெருகும் நல்ல நாள்.

கடகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நல்ல நாள். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள், அவசர முடிவு கூடாது.

சிம்மம்: வேலைக்கான ஆர்டர் வரும். மகிழ்ச்சியான நாள். அந்தரங்க உறுப்புகளில் பிரச்சனை வரலாம். ஹார்மோன் பிரச்சனை கூட வருவதற்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: திருமண செய்தி கூடி வரும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தன வரவு உயரும். உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பிற்பகலுக்கு மேல் பரபரப்பு இருக்கும். குடும்பத்து பெரியவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இறையருள் உண்டு. வரவுகள் உயரும். கல்வி நலன் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மகிழ்வான நாள். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டு. இடமாற்றம் குறித்து செய்தி வரும். கால் பகுதிகளில் பிரச்சனை வரலாம். வியாபார ரகசியங்களை யாரிடமும் சொல்லக் கூடாது.

தனுசு: இனிய நாள். வெற்றிகள் பெருகும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலக தொந்தரவு விலகும். கடன் தொந்தரவு விலகும்.

இதையும் கேளுங்கள்: ஜனவரி 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை: இந்த வார ராசி பலன்!

மகரம்: இனிய நாள். சந்தோஷம் பெருகும் நல்ல நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்: நல்ல நாள். வெற்றிகரமான நாள். அனுகூலமான செய்தி தேடி வரும். மார்பக நோய்க்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மௌனமாக இருக்க வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. அமைதியாக தியானம் செய்ய வேண்டும். வரவுகள் உயரும். விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள்.