ஓம் முருகா ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்!

30

ஓம் முருகா ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்!

ஆகஸ்ட் 07 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (07-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: படிப்படியாய் வாழ்க்கை நிலை உயரும். வேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களை பழுது நீக்கி இயக்குவது நல்லது. வளர்ப்பு பிராணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்: இனிய நாள். வாழ்க்கையில் மங்களங்கள் பொங்கும் நல்ல செய்தி வரும். சுப செய்திகள் தேடி வரும் நாள். சுமங்கலி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மிதுனம்: யாரிடமும் பகை வைத்துக் கொள்ளக் கூடாது. கண்டங்கள் உருவாகலாம். விபத்துக்கள் உருவாக வாய்ப்பு உண்டு. அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

கடகம்: மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் வழிபாடு தரும். வியாபாரத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.

சிம்மம்: பகலில் பக்கம் பார்த்து பேச வேண்டும். நெருங்கியவர்கள் சிலர் பொய்யான கருத்துக்களை சொல்வார்கள். உண்மை என்று நம்பி மோசம் போய்விடக் கூடாது. உடல் உபாதைகள் இருக்கும். பணியாளர்களால் பிரச்சனை இருக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கன்னி: வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய ஆசை வரும். கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: இனிய நாள். தன வரவு வரும். குடும்பத்து பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. முன்னேற்றகரமான நாள்.

விருச்சிகம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். கழிவு பகுதிகளில் பிரச்சனை வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.

தனுசு: உங்களுக்கு எதிரான பிரச்சனைகள் தீர்ந்து சாதகமான பலன்கள் நடக்கும். சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாயின் அன்பு பெரியது. ஓம் முருகா ஓம் முருகா என்று சொல்ல வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

மகரம்: உங்களுக்கு எதிரான விஷயங்கள் நன்மையாக முடியும். பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். செல்வ செழிப்பு வளரக் கூடிய காலகட்டம். வியாபாரத்தில் மிதமான லாபம் உண்டு.

கும்பம்: அருமையான நாள். வெற்றிகள் குவியும். விநாயகரை வழிபட ஏராளமான வெற்றிகள் உண்டு. சகோதரர்கள் வில்லன்களாக மாறுவார்கள்.

மீனம்: உடல் நல பிரச்சனைக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். 30 தீபங்கள் ஏற்றி குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு பிரச்சனைக்கு விநாயகருக்கு மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.