கடகம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

134

கடகம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கணித்த 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலனை கணித்துள்ளார். இந்தப் பதிவில் நாம் கடகம் ராசிக்கான தமிழ் மாதமான கார்த்திகை மாத ராசி பலனை பார்ப்போம்….

கடகம்:

அரசியலில் புத்திக் கூர்மையும், ஆளுமை திறனும் பெற்றிருப்பார்கள். திறமைகள் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பொருளாதார நிலை உங்களது தேவைக்கு ஏற்ப இருக்கும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். உடன் பிறப்புகளாலும் நல்ல ஆதாயமான பலன் உண்டாகும்.

கடகம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். எதிலும் பொறுமை, நிதானம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சரியாகும். வீடு, வாகனத்தை சரிபடுத்த செலவினங்கள் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பங்கு வர்த்தகத்தில் சிறிது இழப்பீட்டிக்கிற்குப் பிறகு லாபம் உண்டாகும்.

குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் உங்களுக்கு உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு இருக்கும். குடும்ப விஷயங்களில் வெளியாட்கள் தலையீடு இருக்க கூடாது.

கஷ்ட நஷ்டங்களுக்கு பரிகாரம் கொடுக்கும்: கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. தந்தைக்கு மருத்துவ செலவு உண்டு. பிதுர் வழி சொத்துக்கள் பிரச்சனை உருவாகும். தொழில், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவார்கள்.

உங்களது வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வீண், வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை அளிக்கும். நண்பர்களால் ஆதாயமான பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 9, 10 மற்றும் 11.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கள் கிழமை நாளில் சென்று வழிபடலாம்.