கடன் இல்லை என்றால் கடன் வாங்கணும்: கன்னி ராசி ஆவணி மாத பலன்!

188

கடன் இல்லை என்றால் கடன் வாங்கணும்: கன்னி ராசி ஆவணி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் கன்னி ராசி ஆவணி மாத ராசி பலன்…

பொன்னான ஒரு மாதம். பத்திரிக்கைத் துறை, வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், வங்கி பணியாளர்கள், ஆடிட்டர்கள், இலக்கியவாதிகள் என்று அனைவரும் தங்களது திறமையை பயன்படுத்தி முன்னுக்கு வர வேண்டிய காலகட்டம். அதோடு, மேலிடத்திலும் செல்வாக்கு பெறுவார்கள்.

சினிமா துறையில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து அதிக சம்பாதிக்கும் ஒரு பொன்னான மாதம். லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு மாதம். கல்வித்துறையில் கல்வியாளர்களுக்கு ஒரு உன்னதமான மாதம். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். திருமணம், சீமந்தம், காதணி விழா என்று ஏதாவது, சுப நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் கன்னி ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

வேலையிழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்களுக்கு சிறப்பான மாதம். வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தாயாரின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். வண்டி வாகனங்கள் செலவு வைக்கும். ஒரு சிலருக்கு வீட்டு பராமரிப்பு செலவு கூடும். அத்தியாவசிய தேவை எதுவோ அதை மட்டும் செய்ய வேண்டும்.

குல தெய்வத்தின் அனுக்கிரகம் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும். கடனே இல்லையென்றால் கடன் வாங்கிக் கொள்ளுங்கள். சொந்த த் தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கையான பணியாளர்கள் அமைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். ஆனால், கணவன் – மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அசையா சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. தந்தை வழி சொந்தங்களால் பகைமை பாராட்டுவீர்கள். தொழிலை மாற்றியத்தால் கூட கை கொடுக்கும். தொழிலை விரிவாக்கம் செய்தாலும் லாபம் உண்டு. அலுவலகங்களில் மேலதிகாரிகள், சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. முதல் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டு, 2ஆவது திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.