கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்: மீனம் ஆவணி மாத ராசி பலன்!

99

கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்: மீனம் ஆவணி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மீனம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

மீன ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் 2021…

பித்து பிடித்தவர்கள் போன்று இருப்பீர்கள். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று தெரியாது. ஒரே குழப்பமாக இருக்கும். தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுபச் செலவுகள் இருக்கும். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு மரியாதையை வெளிவட்டாரத்தில் எதிர்பார்க்க முடியாது. அசையாச் சொத்துக்களால் வருமானம் பெறக் கூடிய ஒரு நிலை வரும். பண வருவாய் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல், வாங்கள் சிறப்பாக செய்யலாம். எந்த குறையும் வராது.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மீனம் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு அற்புதமான மாதம். வெளிநாட்டில் வேலை இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து சந்தோஷமாக இருப்பார்கள். இளைய சகோதர வழியில் கருத்து வேறுபாடு ஏற்படும். எடுக்கும் காரியங்களில் கூட சுணக்கம் ஏற்பட்டு அது வெற்றிகரமாக முடியும்.

வீடு, நிலம், மனை வாங்கும் யோகம் உண்டு. வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் அக்கறையும் படிப்பார்கள். தாயாரின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் உண்டு. ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

எதிரிகள் இருக்கும் இடம் தெரியாது. கடன் சுமை படிப்படியாக குறையும். நீதிமன்றங்களில் வழக்கு ஏதேனும் இருந்தால் அது சாதகமாக முடியும். நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு வருவதற்கு வாய்ப்பு உண்டு. யோக பாக்கியம் நிறைந்த ஒரு மாதம்.