கடன் பிரச்சனை வரலாம்; பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்!

42

கடன் பிரச்சனை வரலாம்; பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்!

ஆகஸ்ட் 03 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (03-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: இளைஞர்களுக்கு மிகச்சிறப்பான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். விளையாட்டு துறை வீரர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். பல்வேறு வகையில் வெற்றி கூடி வரும்.

ரிஷபம்: இந்த நாள் அருமையான நாள். சாதகமான பலன்கள் உண்டு. சுபகாரியங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் ஈடுபடும். ப்ரீவெட்டிங் ஷூட் பற்றி சிந்திப்பீர்கள். பதவிகள், பொறுப்புகள் வந்து சேரும். கூடுதல் லாபம் உண்டு.

மிதுனம்: மிக மிக வெற்றிகரமான நாள். ஆசைகள் நிறைவேறும். வாக்கு வன்மை பெருகும். வருமான தடை நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கடகம்: முன்னேற்றமான நாள். அன்பு பெருகும். நெருக்கம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். மனதில் தைரியம் பெருகும். வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்பு உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். இடமாற்றம் கிடைக்கப் பெறும்.

சிம்மம்: பணியிடத்தில் தடுமாற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவு கூடாது. மாற்றி யோசிக்க வேண்டும்.

கன்னி: லாபமான நாள். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது. நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நிறைய மாற்றங்கள் வரக் கூடிய நாள். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும்.

விருச்சிகம்: மிக அருமையான நாள். தொட்டது துலங்கும். சந்தோஷமான நாளாக அமையும். நண்பர்களால் நன்மை உண்டு.

தனுசு: மிகச்சிறந்த நாள். ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியாற்றும் இடங்களில் வேலை நெருக்கடி இருக்கும். வேலையை விட்டு விலக வேண்டிய சூழல் வரலாம். கண்களில் பிரச்சனை வரலாம். சமூக வலைதளங்களில் எச்சரிக்கை தேவை. கடன் பிரச்சனைகள் வரலாம். பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் அளவான லாபம் உண்டு.

மகரம்: ஏராளமான நன்மைகள் நடக்கும் நல்ல நாள். அதிர்ஷ்டம் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். பிஸினஸ் வளர்ச்சியடையும். அலுவலகத்தில் இருக்க கூடிய சிக்கல் தீரும்.

கும்பம்: நிதானமாக இருக்க வேண்டிய நாள். எதிலும் அவசரம் கூடாது. யாரையும் நக்கல் செய்யக் கூடாது. உடல் நலனில் அக்கறை தேவை. குடும்ப உறவுகளை அரவணைத்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் தேவையான கடனுதவி கிடைக்கும்.

மீனம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். செல்போன் மூலம் நல்ல தகவல் வரும். சமூக வலைதளத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். அருமையான நாள்.