கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது!

30

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது!

அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியான இன்றைய (26-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 26 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நண்பர்களால் ஏராளமான நன்மைகள் உண்டு. தோல் தொடர்பான பிரச்சனை உண்டு. விலையுயர்ந்த் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

கும்பம்: நல்லதொரு நாள். குடும்பத்தில் சந்தோஷம். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

மகரம்: செயலை செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும். பணிவால் வெல்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். https://www.youtube.com/watch?v=jfxgvl5zBo8

தனுசு: நல்ல பெயரை கெடுப்பதற்கு என்று சிலர் வருவார்கள். எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டும். நல்ல வருமானம் வந்து சேரும். கவலை வேண்டாம். எதிர்பார்க்கும் காரியங்கள் எல்லாம் நன்மையாக முடியும்.

விருச்சிகம்: மனதில் இருக்கும் ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது. நடப்பதெல்லாம் நன்மை. சிக்கல்கள் எல்லாம் தீரும். வியாபாரத்தில், பண வரவில் அப்படி இப்படி தான் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். முன்னேற்றகரமான ஒரு நாள்.

துலாம்: குழந்தை பாக்கியத்திற்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். வாகன யோகம் உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வெற்றிகரமான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் நன்மையாக முடியும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றமான செய்தி வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. தன வருமானம் வந்து சேரும். முதுகு வலி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: நியாயத்திற்கான கோபம் வரும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை யோசிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல நாள். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்: நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சோதனைகள் வரலாம். தன லாபம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. தவறு செய்வீர்களா என்று பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறர்கள். எச்சரிக்கை தேவை.

மிதுனம்: இனிய நாள். சாதனைகள் படைக்கக் கூடிய நாளாக இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். குடும்ப நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பதற்றம், படபடப்பு இருந்து கொண்டே இருக்கும்.

ரிஷபம்: அலுவலகத்தில் கெட்டப் பெயர் வரும். மாற்றி யோசிக்க வேண்டும். ஆரோக்கியமான சூழல் இருக்கும். பிறரது விஷயங்களில் தலையிடக் கூடாது. தன லாபம் உண்டு. https://www.youtube.com/watch?v=jfxgvl5zBo8

மேஷம்: அருமையான நாள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. உற்சாகம் பிறக்கும். தொட்டது துலங்கும் நல்ல நாள். பிறருக்கு நன்மையான காரியங்களை செய்வீர்கள்.