கடைசி 10 நாள் அற்புதமான காலகட்டம்: துலாம் ராசி ஆவணி மாத பலன்!

83

கடைசி 10 நாள் அற்புதமான காலகட்டம்: துலாம் ராசி ஆவணி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் துலாம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

மாதத்தின் கடைசி 10 நாட்கள் அமர்க்களமான நாள். நினைத்தது நடக்கும். சில நேரங்களில் நினைக்காதது கூட நடந்து வெற்றி உண்டாகும். எண்ணிய செயல் ஈடேறும். எல்லாம் லாபமாக முடியும். செலவுகள் அதிகரிக்கும் ஒரு மாதம். பெண்கள் ஆடை ஆபரணங்கள், தங்க நகைகள் வாங்குவதன் மூலமாக செலவுகள் அதிகரிக்கலாம்.

பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக செய்யலாம். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கூடும். சினிமா மற்றும் கலைத்துறையில் ஈடுபடும் அன்பர்களுக்கு இது ஒரு பொற்காலம். தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவு பையை நிரப்பும் ஒரு மாதம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள், நடத்தக் கூடிய ஒரு அமைப்பு இருக்கிறது.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் துலாம் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

இளைய சகோதரத்தால் முழு ஆதரவு கிடைக்கும். வண்டி, வாகனங்களால் செலவுகள் இருக்கும். அசையா சொத்துக்களுக்கும் செலவினங்கள் ஏற்படக் கூடிய ஒரு மாதம். தாயாரின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். பிள்ளைகளால் பெருமிதம் அடையக் கூடிய உன்னதமான ஒரு மாதம். குல தெய்வத்தின் அனுக்கிரகம் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள். ரிஷிகள், முனிகள், குருமார்களின் ஆசிர்வாதம் கண்டிப்பாக கிடைக்கும்.

ஒரு சில ராசி அன்பர்களுக்கு தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகலாம். வாழ்க்கை துணையால் யோக பாக்கியம் உண்டாகும். அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் பெருகும்.

நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு ஒரு சந்தோஷமான மாதம். வேலையிழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்லவொரு சந்தோஷத்தை பெறக்கூடிய அமைப்பு. தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். கடின உழைப்பு தேவை. அலுவலகங்களில் மேலதிகாரிகளின் சொல் படி நடந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

சந்திராஷ்டம நாட்களில் பணப்பரிவர்த்தனை வேண்டாம். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. பொறுமையாக இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.