கண்காணிக்கப்படுவதால் கடுமையாக உழைக்க வேண்டி வரும்!

42

கண்காணிக்கப்படுவதால் கடுமையாக உழைக்க வேண்டி வரும்!

அக்டோபர் 06 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (06-10-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும். தேவையான கடனுதவி கிடைக்கும்.

ரிஷபம்: அரளி பூ அம்மனை வழிபட வேண்டும். துர்க்கை, முருகனை வழிபட புதிதாக வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். சகோதர உறவு மேலோங்கும்.

மிதுனம்: இனிமையான ஒரு நாள். செலவு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. எல்லையில்லா மகிழ்ச்சி தரும்.

கடகம்: காலைப் பொழுது அருமையாக இருக்கும். மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். பிஸினஸ் ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது. தொழில் லாபம் பெருகும்.

சிம்மம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். நல்ல வேலை கிடைக்கும். சொத்து, சுகம் கூடும். பிஸினஸில் தன லாபம் வரும்.

கன்னி: பயணங்களில் கவனம் தேவை. சொத்து, சுகம் வாங்கும் ஆசை வரும். பழைய சொத்துக்களை விற்க முயற்சி செய்யலாம்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: கல்யாண செய்தி கூடி வரும். காதல் திருமணம் கை கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். அலுவலக சூழல் இதமாக இருக்கும். கேளிக்கை விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: பெருமையை பேசுவார்கள். வீர, தீரம் வெற்றி பெறும் நாள். புகழ் பெறக் கூடிய நாள். பகைவர்களை வெல்வீர்கள். சகோதர உறவுகள் நன்மை அளிக்கும்.

தனுசு: பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. சலசலப்பு இருக்கும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள். கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி தேடி வரும்.

மகரம்: ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள். தன லாபம் உண்டு. தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டு.

கும்பம்: அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும். நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

மீனம்: தன லாபம் தரக் கூடிய நாள். பழைய சொத்துக்களை விற்க வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வரும் நாள். வெளிநாட்டு தொடர்பு விரிவடையும்.