கண்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்: விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

147

கண்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்: விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13 ஆம் தேதியான இன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகியுள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் விருச்சிகம் ராசி – வீடியோ தொகுப்பு!

விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

பொதுவாக குரு பகவானுக்கு பெயர்ச்சி என்றால், ஒரு ஆனந்தம், சந்தோஷம். ஏனென்றால், குரு பகவான் நன்மைகளை வாரி வழங்குவார். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் அல்லவா. 9 கிரகங்களில் சுபக்கிரகம் குரு பகவான் மட்டுமே. குரு என்றாலே ஏணியில் ஏற்றி உயரத்திற்கு அனுப்பி வைப்பவர். விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி என்றால் தனிச்சிறப்பு தான். ஏன் என்று கேட்டால், தன வருமானத்தை தரக்கூடிய 2ஆவது ஸ்தானத்திற்கும், பூர்வ புண்ணிய குறிக்க கூடிய பஞ்சம ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான். 2ஆம் இடத்திற்கும், 5ஆம் இடத்திற்கும் அதிபதி குரு பகவான்.

அப்படி, இந்த குரு பகவான் எப்படியும் இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தந்துவிடுவார். இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்றால், உங்களது சதுர்த்தம கேந்திரியத்தில் அமைகிறது. மிகப்பெரிய சந்தோஷம் அமையும். 4ஆம் இடத்தில் குரு. இந்த இடத்திற்கு மாத்ரு ஸ்தானம் என்று பெயர். அதாவது பெற்ற தாயை குறிக்கும் ஸ்தானம். வண்டி, வாகன யோகங்களை குறிக்கும்.

தேக ஆரோக்கியத்தையும் குறிக்கும். பல நன்மைகளை வாரி வழங்கும். இதுனால், வரையில் இருந்த காயங்கள், விபத்துகள், வீண் பழி, பாவங்கள், பிரிவினை, எல்லா பிரச்சனைக்கும் நீங்களே காரணம், கல்லீரல் பிரச்சனை, முதுகு வலி பிரச்சனை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இது போன்ற பிரச்சனைகளிலிருந்தும், உங்களுக்கு வரக்கூடிய கண்டங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். நல்ல முன்னேற்றம், மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். https://www.youtube.com/watch?v=Zhc0BRFAcQs

பகைவர்களால் இருந்த ஆபத்துகள் விலகும். கண்டங்கள் குறைகிறது. இதுவரையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக வேலை வாய்ப்பு அமையும். பலருக்கு அரசு தொடர்பான வேலை கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வரும். வங்கி தொடர்பான வேலையும் கிடைக்கும். பங்கு வர்த்தக முதலீட்டின் மூலமாக கூட லாபம் வரும். இடமாற்றம் உண்டாகும். வேலை மாற்றம் உண்டாகும்.

விரும்பிய இடத்திற்கு மாற்றம் உண்டாகும். இதுநாள் வரையில் இருந்த உடல் ரீதியிலான பிரச்சனை சரியாகும். கடல் கடந்து செல்வதற்கு பலருக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் செய்வதற்கும் நல்ல யோகமாக காலமாக இருக்கும். உங்களுக்கு இருந்த பல்வேறு பிரச்சனைகள் மறைகிறது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வியாபாரத்தில் முன்னேற்றமான தகவல் வந்து சேரும். https://www.youtube.com/watch?v=Zhc0BRFAcQs