கண் திருஷ்டியால் உடல் நல பாதிப்பு உண்டு!

75

கண் திருஷ்டியால் உடல் நல பாதிப்பு உண்டு!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 20 ஆம் தேதியான இன்றைய (20-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: சந்தோஷம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்கும். தன வரவு பெருகும். அலுவலக நெருக்கடிகள் இருக்கும்.

ரிஷபம்: சுப காரிய செய்திகள் கூடி வரும். தன வரவு பெருகும். வயிற்று பிரச்சனை இருக்கும்.

மிதுனம்: ஆரோக்கியமான போட்டிகளை சந்திப்பீர்கள். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு. கல்வி முயற்சி மகிழ்ச்சி தரும். இன்பங்கள் பெருகும் நல்ல நாள்.

கடகம்: இனிய நாள். எண்ணங்கள் பூர்த்தியாகும் நல்ல நாள். உடல் நலனில் அக்கறை வேண்டும். வெளிவட்டார உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் சோதனைகள் உண்டு. தன வரவு பெருகும்.

சிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன வரவு அதிகரிக்கும். வெற்றிகரமான நாள்.

கன்னி: பல்வேறு வகையான மாற்றங்களை சந்திப்பீர்கள். வேலையில் மாற்றம். குடும்பத்தில் முக்கிய முடிவுகளில் மாற்றம் உண்டாகும். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தன வரவு பெருகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அற்புதமான நாள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

விருச்சிகம்: மிகச்சிறந்த நல்ல நாள். தன வரவு பெருகும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. குல தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். கண் திருஷ்டியால் உடல் நல பாதிப்பு உண்டாகும்.

தனுசு: பாக்கியமான நாள். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

மகரம்: உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளிப் போட வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தன வரவு பெருகும்.

கும்பம்: நற்செய்தி கூடி வரும். குடும்ப முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தடைகள் விலக சுப்பிரமணியபுஜங்கம் சொல்ல வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: வெற்றிகள் குவியும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வண்டி, வாகன்ங்களில் கவனம் வேண்டும். தன வரவு பெருகும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.