கதைகள், காவியங்கள் எழுதுவோருக்கு வாய்ப்புகள் தேடி வரும்!

95

கதைகள், காவியங்கள் எழுதுவோருக்கு வாய்ப்புகள் தேடி வரும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… மார்ச் 16 ஆம் தேதியான இன்றைய (16-03-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மிகச்சிறந்த நாள். தொழில் முயற்சிக்கு ஏற்ற நாள். சமாதானத்திற்கு கூட இந்த நாளை பயன்படுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும் பொன்னான ஒரு நாள். அலுவலக சிக்கல் தீரும். மன தைரியம் அதிகரிக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். குடும்பத்தில் ஏராளமான நன்மைகள் உண்டு.

மிதுனம்: சந்தோஷமான ஒரு நாள். தைரியமான நாள். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். புதிதாக சொத்து, சுகங்கள் வாங்கும் யோகம் உண்டு. வீடு தொடர்பான பராமரிப்பு பணிகள் நடக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் யாவும் அனுகூலமாக முடியும். பேச்சில் சக்தி, வல்லமை பிறக்கும்.

சிம்மம்: மிகச் சிறந்த வெற்றிக்கான நாள். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். இழந்த சொத்துக்கள், அந்தஸ்து, கௌரவம் திரும்ப பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் குறித்து நல்ல செய்தி வரும். தன வரவு உண்டு.

கன்னி: மிகச் சிறந்த நாள். தன வரவு உண்டு. குடும்பத்தில் உள்ள பிணக்குகள் விலகும். தேவையான இடமாற்றம் உண்டு. நன்மைகள் ஏராளமாக நடக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வெற்றிகரமான நாள். வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மூதாதையர்களின் ஆசி உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு. வாழ்க்கை துணைவரால் முன்னேற்றம் உண்டு.

தனுசு: முன்னேற்றமான ஒரு நாள். கதைகள், காவியங்கள் எழுதுவோருக்கு வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக இனிப்பான செய்தி வரும். மன மகிழ்ச்சியான நாள்.

மகரம்: எண்ணங்கள் பூர்த்தியாகும் நல்ல நாள். எதையும் யோசித்து செய்ய வேண்டும். பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை.

கும்பம்: தன புழக்கம் அதிகரிக்கும். கடன்களை அடைக்க முன் வருவீர்கள். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும்.

மீனம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் முயற்சியும், முன்னேற்றமும் உண்டு.

நல்லதொரு நாள். மகிழ்ச்சிக்குரிய நாள். வெற்றிகள் குவியும் ஆனந்தமான நாள். பிள்ளைகளின் முயற்சி பலிதமாகும். தொழில் முயற்சி கூடும். புதிய பதவிகள் தேடி வரும்.