கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்: அதிர்ஷ்ட காற்று வீசும் காலகட்டம்!

166

அதிர்ஷ்ட காற்று வீசும் காலகட்டம்: கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்!

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சர்க்கரைப் பொங்கலாக இருக்கும். சங்கடங்களை தீர்க்கும் சனிப்பெயர்ச்சியாக இருக்கும். காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே இருக்கும். நிதானமாக நடக்கக் கூடியவர் சனி பகவான். பலரது வாழ்க்கையை புரட்டி போட்டாலும், அவர் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் வாழ்க்கையின் உச்சத்தில் அமரச் செய்வார்.

சனி பகவான் கன்னி ராசிக்கார்ர்களுக்கு நன்மை செய்வார். அவர்களுக்கு யோகமான காலம். அதிர்ஷ்ட காற்று அவர்கள் மீது வீசுகிறது. வாழ்க்கையில் வெற்றி மீது வெற்றி வரும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ஒரு ஆறுதலை தரும். அலுவலகத்தில் அடையாளம் தெரியாதவராக இருந்தால், உங்களது தனித்துவம் தெரியத் தொடங்கும்.

உடம்பில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவார். உள்ளத்தில் இறைவன் அமர்ந்து உங்களை காப்பாற்றுவார். உங்களுக்கு இருக்கும் பரம்பரை வியாதியை வெளிப்படுத்தி அதனை குணப்படுத்துவார். வண்டி, வாகன்ங்களில் கவனமாக சென்று வர வேண்டும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. வண்டியில் செல்லும் போது நிதானமாக சென்று வர வேண்டும்.

Also Read This: கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பலன் 2023 – வீடியோ!

திருமணத் தடை நீங்கும். இந்த இரண்டரை ஆண்டுகளில் பலருக்கும் திருமணம் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வரக் கூடிய யோகம் உண்டு. பெண்கள் பலரும் புதிதாக சுய தொழில் தொடங்குவீர்கள். என்னென்ன தொழில் தெரியுமோ அதனையெல்லாம் செய்து பார்க்கலாம்.

அப்பாவிற்கும், மகளுக்குமான உறவு ஆனந்தமான உறவாக இருக்கும். தாய், தந்தையின் உடல்நலனில் அதிக அக்கறை வேண்டும். ஏற்கனவெ இருக்கும் பிரச்சனை நிவர்த்தியாகும். கலை உலகத்தைச் சேர்ந்தவர்காள் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்கள் மீது பெருமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மருத்துவ படிப்பிற்கு வெளிநாட்டிற்கு சென்று வருவீர்கள். பிஸினஸ் செய்யும் அனைவருக்கும் பழைய கடன்கள் அடைபடும். நல்ல முன்னேற்றம் உண்டு. ஆசிரியர்கள், நீதிமான்கள், வழக்கறிஞர்கள் என்று அனைவருக்கும் நல்ல ஒரு காலகட்டம். இதுவரை இருந்த அனைத்து சோதனைகளும் விலகும்.

சொத்து, சுகங்கள் பெருகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இது அனைத்தும் பொதுவான பலன்களே. அவரவர் சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் இருக்கும் இடங்களை வைத்து சனி பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை ஜோதிடரை அணுகி தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.