கல்யாண செய்தி கூடி வரும், செல்வ நிலை உயரும்!

143

கல்யாண செய்தி கூடி வரும், செல்வ நிலை உயரும்!

ஜூன் 24 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (24-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மிக அருமையான நாள். காலையில் மனைவியிடம் விட்டுக் கொடுத்து சென்றால் மாலையில் மகிழ்ச்சி இருக்கும். தன வரவு உண்டு. உடல் நல பாதிப்புக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்: அருமையான நாள். கைத்திறன் அதிகரிக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் ஒரு நாள். வம்பு, வழக்குகள் வரலாம். அமைதியாக இருக்க வேண்டும். அன்னை ஆதிபராசக்தியை வழிபட வேண்டும். பண வரவு உண்டு. பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு.

மிதுனம்: மிகச்சிறந்த நாள். விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். சுபகாரியங்கள் உண்டாகும். பெண்கள் தங்களது பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

கடகம்: இந்நாள் இனிய நாள். மங்கள காரியங்கள் கூடி வரும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு. மூத்த சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

சிம்மம்: பாக்கியமான நாள். தர்ம கர்மாதிபதி யோகம் உண்டு. திருமண செய்திகள் வரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காசு, பணம் செலவாகும். வியாபார விருத்தி உண்டு.

கன்னி: வெளிநாட்டு தொடர்பு விரிவடையும். நாக தெய்வங்களை வழிபட வேண்டும். ஏராளமான நன்மைகள் உண்டு. சுபகாரியங்கள் நடக்கும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். வயிற்று பிரச்சனை இருக்கும். இந்த நாள் இனிய நாள். மருத்துவத் துறையில் சாதிக்கும் நாள். புதிய வாய்ப்புகள் வரும்.

விருச்சிகம்: எதிரிகளை வெல்லக் கூடிய ஒரு நாள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். கூடுதல் லாபம் கிடைக்கும். நன்மைகள் ஏராளமாக நடக்கும்.

தனுசு: கல்யாண செய்தி கூடி வரும். விசேஷமான நாள். மேன்மைகள் உண்டாகும். சுப செய்திகள் உண்டு. கௌரவ பதவிகள் கிடைக்கும். மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். செல்வ நிலை உயரும். புதிய வீடு கட்டும் யோகம் உண்டு. வேலை கிடைக்கும்.

மகரம்: மகிழ்ச்சியான நாள். அழகான வீடு கட்ட வேண்டும் என்று ஆசை வரும். வாகனம் வாங்க வேண்டும் என்று யோகம் வரும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. கலைத்துறையினருக்கு வெற்றி உண்டு. எழுத்தாளர்களுக்கு வெற்றி. குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் நிறைந்திருக்கும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வெற்றிகரமான நாள்.

கும்பம்: ஏராளமான நன்மைகள் நிறைந்த நாள். வேலை கிடைக்கும். மனமகிழ்ச்சியான சூழல் உண்டு. வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். உயர் பதவிகள் உண்டு. உத்தியோக மாற்றம் உண்டு.

மீனம்: நல்ல தன வரவு உண்டு. மன தைரியம் கூடும். கல்யாணம் கூடி வரும். கல்யாண சூழல் உண்டு. சகோதரிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும்.