கஷ்டப்படுபவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் அமையும்!

23

கஷ்டப்படுபவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் அமையும்!

ஜூன் 30 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (30-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: தந்தையின் உதவி இருக்கும். உறவினர்கள் உதவி செய்வார்கள். முதலீடு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும்.

ரிஷபம்: தத்து குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வ நிலை உயரும் நாள். மஹான்களின் வழிபாடு செய்ய வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

மிதுனம்: மிக அருமையான நாள். குருவாயூரப்பனை வழிபட வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும். வெற்றிகள் தேடி வரும். சுப செய்திகள் கூடி வரும். மகிழ்ச்சியான ஒரு நாள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: தண்டுவட பிரச்சனை இருக்கும். எதைப்பற்றியும் கவலை கூடாது. புதிய வியாபாரம் ஆரம்பிக்க எண்ணம் மேலோங்கும். எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும்.

சிம்மம்: அதிர்ஷ்டகரமான ஒரு நாள். பணத்தடைகள் விலகும். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. உணவு பதார்த்தங்களில் கவனம் தேவை.

கன்னி: அதிர்ஷ்டகரமான ஒரு நாள். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெருமாள் வழிபாடு செய்ய புரமோஷன் குறித்து நல்ல செய்தி வரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வெற்றிகரமான தினம். பெரும் புகழ் சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. விஐபிக்களின் அறிமுகம் உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்: அலுவலகத்தில் நல்ல பதவி கிடைக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாரது உடல் நலனில் கவனம் தேவை.

தனுசு: நன்மைகள் அதிகம் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். வியாபார தொடர்புகள் விரிவடையும். கஷ்டப்படுபவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. முருகப் பெருமான் தரிசனம் செய்ய வேண்டும். முருகருக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மைகளும் உண்டு.

மகரம்: எல்லா வகையிலும் அனுகூலமான நாள். சுப செய்திகள் தேடி வரும். மாலையிடும் ஒரு நாள். நல்ல பதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இருக்கும். உடல் நல பாதிப்பு வரலாம்.

கும்பம்: மிக அனுகூலமான நாள். தெய்வ அனுகூலம் நிறைந்த ஒரு நாள். வாழ்க்கை வசதிகள் பெருகும் ஒரு நாள். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். நல்ல பதவிகள் தேடி வரும்.

மீனம்: வருமானம் உயரும் ஒரு நாள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டு வந்து சேர்வார்கள். அமைதியான சூழ்நிலை நிலவும். தியானம் செய்ய வேண்டும். நட்பு பலம் பெருகும்.