கஷ்ட நஷ்டங்களுக்கு பரிகாரம் கொடுக்கும்: கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்!
நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13 ஆம் தேதியான இன்று மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் கடகம் ராசி – வீடியோ தொகுப்பு!
கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….
கடந்த சில காலமாக கடக ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவி உறவு பிரச்சனை, தொழில் பிரச்சனை இருந்தது. சிலருக்கு உடல் நலக் குறைவு இருந்தது. கடக ராசிக்கு குரு பகவான் அட்டம ஸ்தானத்தில் சென்று அமர்கிறார். கடக ராசிக்கு குரு பகவான் 6 மற்றும் 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி. இந்த இரு இடங்களில் அமர்ந்து கொண்டு உங்களது தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். https://www.youtube.com/watch?v=czoqTCCJb30
குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் அதிக பலன் தருவார் என்பதன் அடிப்படையில் தான் இந்த கடக ராசிக்கான பலன்கள் என்ன என்பது குறித்து பார்க்கப் போகிறோம். குரு பகவான் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், நல்ல தன லாபத்தை உருவாக்கித் தருவார். பொருளாதார ரீதியாக என்னவெல்லாம் கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டதோ அதையெல்லாம் சரி செய்ய வருகிறார்.
கண் தொடர்பான பிரச்சனை சரியாகும். குரு பகவானின் பார்வை என்பது வாக்கு சாதுரியத்தை அதிகரிக்க போகிறது. பேச்சில், மதிப்பும், மரியாதையும் உருவாகும். சந்தேகம், குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதற்கும் தைரியமாக இருக்க வேண்டும். குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருளாதார வசதி உருவாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல தெளிவை பெற்றுத் தரும். https://www.youtube.com/watch?v=czoqTCCJb30
ராசிக்கு 7ஆவது இடத்தில் சனி பகவான் இருப்பதால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டிருக்கும். வாழ்க்கைத் துணையை குறிப்பது இந்த 7ஆவது ஸ்தானம். குடும்பத்தை எதிர்த்து ஆசை, ஆசையாய் கூட திருமணம் செய்திருப்பீர்கள். திருமணம் ஆன சிறிது நாட்கள் வரை சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இருவருமே பொருத்தமில்லை என்று இருவருமே வருத்தப்படுவீர்கள்.
சண்டை, சச்சரவு கோர்ட், கேஸ் என்று சென்றிருப்பீர்கள். இப்படிப்பட்ட சூழல் தான் கடக ராசிக்காரர்களுக்கு நடக்குது. இப்பொழுது இந்த குரு பெயர்ச்சி, உங்களுக்கு ஒரு சமாதான பேச்சுவார்த்தையை கொடுக்கும். குடும்பம் என்றால், அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதோடு, புதிதாக திருமணமானால் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும் என்பதை தெளிவுபடுத்தும். https://www.youtube.com/watch?v=czoqTCCJb30
மேலும், பஞ்சாயத்து பேசுவதற்கு நல்ல நல்ல மனிதர்கள் முன்வருவார்கள். சமாதானத்தை ஏற்றுக் கொண்டால், இந்த குரு பெயர்ச்சி, உங்களது குடும்ப வாழ்க்கையை காப்பாற்றும். கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகும். மருத்துவம், ஆராய்ச்சி செய்வதற்கு வழி வகை உண்டாகும். இந்த காலகட்ட த்தில் அதிக செலவுகள் வரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தேக ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். https://www.youtube.com/watch?v=czoqTCCJb30
குருவின் பார்வை 4ஆவது ஸ்தானத்தில் விழுவதால் தேக ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். எல்லா தடைகளும் விலகும். புதிய தொழில் தொடங்க நல்ல காலம் வந்துவிட்டது. வியாபாரம் மாற்றி அமைக்கலாம். வீடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம். இப்படி அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே செல்லலாம்.