காகத்திற்கு உணவளிக்க வேண்டும்!

82

காகத்திற்கு உணவளிக்க வேண்டும்!

செப்டம்பர் 06 ஆம் தேதியான இன்றைய (06-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 06 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளால் கருத்து வேறுபாடு வரும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். போட்டி, பந்தயங்களை சமாளிக்க வேண்டி வரும். புதிய வேலை வாய்ப்புகள் வரும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும்.

கும்பம்: அனுகூலமான நாள். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது. கணவன் வீட்டினரால் சில சோதனைகள் இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

மகரம்: கண்டிப்பாக உங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவியின் உடல்நலனிலும் அக்கறை வேண்டும். கணவன் – மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாய், தந்தையரை, உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.

தனுசு: மங்களம் பொங்கும் அற்புதமான நாள். மங்கையர்களுக்கு மகிழ்ச்சி ததும்பும் நல்லதொரு நாள். மாணவர்களுக்கு கல்வி நலன் பெருகும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். அளவான நன்மை உண்டு.

விருச்சிகம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். சிவராஜ யோகம் உண்டு. கல்வி நிலை உயரும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் நன்றாக நடக்கும்.

துலாம்: மகாலாட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். கலைஞர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகள் புதிய வியாபாரம் பற்றி சிந்திப்பீர்கள். சிதம்பர ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. பொறுமை அவசியம். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நாள். உடல்நலனிலும் சோர்வு இருக்கும். அளவான நன்மைகள் இருக்கும். ஒரு பதற்றம் இருக்கும். மிகச்சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள்.

கடகம்: தன லாபம் வரும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேருவீர்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகல காரியங்களும் அனுகூலமாகும். பயணத்தில் கவனம் வேண்டும்.

மிதுனம்: மனதிலும், உடல்நலனிம் சில பிரச்சனை. வேலையில் சில தடை. இறைவன் சோதிப்பார், கைவிட மாட்டார். நீங்கள் செய்யும் காரியங்கள் பிறருக்கு சாதகமாக அமையும்.

ரிஷபம்: காகத்திற்கு உணவளிக்க வேண்டும். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும் நாள். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

மேஷம்: வீடு கட்டும் யோகம் உண்டு. சொத்து வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக அமையும். வாகனம் வாங்கிவீர்கள்.

https://www.youtube.com/watch?v=7vUYLMmQSCE