காசு, பணம் சேர ஓம் ஸ்ரீம் மந்திரம் சொல்ல வேண்டும்!

47

காசு, பணம் சேர ஓம் ஸ்ரீம் மந்திரம் சொல்ல வேண்டும்!

மே 21 ஆம் தேதியான இன்றைய (21-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: துர்க்கையை வழிபட வெற்றி உண்டாகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. பல் சொத்தை பிரச்சனை ஏற்படும். வியாபாரத்தில் இரட்டை வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்: அருமையான நாள். கேட்ட வரம் கிடைக்கும் நல்ல நாள். சிறுதூர பயணங்கள் வெற்றி பெறும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நட்த்தலாம். புகழ் பெறும் நாள். எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்: பொறுமையாக இருக்க வேண்டிய நாள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான நாள்.

கடகம்: எதிர்மறை சிந்தனை கூடாது. நான் ஜெயிப்பேன் என்ற எண்ணம் வேண்டும். காலை எழுந்ததும் கண்ணாடியை பார்க்க வேண்டும். மிகச் சிறந்த வெற்றிகள் உண்டு. தொட்ட காரியங்கள் துலங்கும் நாள். வேலைவாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

சிம்மம்: மிக அருமையான நாள். உடல் அசதி இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நிதி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி: மிக அருமையான நாள். தொட்டது துலங்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. புண்ணியங்கள் சேரும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. மங்கள ஓசை கேட்கும் நாள். செல்போன் வழி நல்ல தகவல் வரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிகச்சிறந்த நல்ல நாள். கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வியாபார முயற்சிகள் வெற்றி பெறும். கல்யாண செய்தி தேடி வரும். புதிய வீடு, மனைகள் வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம்: இந்நாள் நல்ல நாள். எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடம் நாள். குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

தனுசு: தனம் தரும் நாள். கல்வி தரும் நாள். ஓம் ஸ்ரீம் என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் காசு, பணம் சேரும். கல்விக்கு ஓம் ஐம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். ஓம் க்ளீம் என்ற மந்திரத்தை சொல்ல தைரியம் பெருகும். எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் நன்மை உண்டு.

மகரம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டு. புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். நல்ல செய்தி தேடி வரும். பட்டங்கள் கிடைக்கும்.

கும்பம்: முயற்சியினால் வெற்றி பெறுவீர்கள். உடல் நலப் பிரச்சனை வரலாம். வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்திற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தனம் சேரும்.

மீனம்: மிக வெற்றிகரமான நாள். நன்மைகள் அதிகம் நடக்கும் நல்லதொரு நாள். தொட்டது துலங்கும். லாபங்கள் அதிகரிக்கும். சிறு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வீர்கள்.