காதல் மலரும் நாள், மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள்!

77
இன்றைய ராசிபலன்

காதல் மலரும் நாள், மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள்!

ஜூன் 22 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (22-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும். பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். பேச்சு சாமர்த்தியம் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.

ரிஷபம்: மிக யோகமான நாள். சுப நிகழ்ச்சி செய்தி வரும். வியாபாரத்தில் போட்டி பந்தயம் இருக்கும். கம்ப்யூட்டர் துறையில் வேலை கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வரும். அதிகார பதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: இறைவனைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஒருவரை பார்க்கும் போது கைகூப்பி வணங்க வேண்டும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபார யுக்திகள் வெற்றியாகும்.

கடகம்: அருமையான நாள். தர்மகர்மாதிபதி யோகம் உண்டு. பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு. காஞ்சி மகாபெரியவா தரிசனம் செய்ய வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. கல்யாண செய்தி கூடி வரும்.

சிம்மம்: அவசர முடிவுகள் கூடாது. தியானம் செய்ய வேண்டும். யோகம் செய்ய வேண்டும். மூளை, உடல் பலம் கூடும். வியாபாரிகளுக்கு அருமையான நாள். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கன்னி: அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வியாபார சிந்தனைகள் பெருகும். தொழில் முனைவோர் ஏற்றம் பெருவார்கள். குழந்தையை தத்தெடுக்கலாம். விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிகம்: மிக அருமையான நாள். உயர்ந்த வெற்றிகள் தேடி வரும். இனிய நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபார நோக்கம் நிறைவேறும்.

தனுசு: யோகமான நாள். வருமானம் கூடும். உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். தோள்பட்டை வலி, முதுகு வலி இருக்கும். கடனுதவி கிடைக்கும்.

மகரம்: காதல் மலரும் அருமையான  நாள். மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள். தனித்திறமை வெளிப்படும். நல்ல லாபம் உண்டு. எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம்: தனம் பெருகும். வாழ்க்கையில் வசதிகள் பெருகும் நாள். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுப செய்திகள் கூடி வரும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: தாய்ப்பாசம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு. சுப காரிய செய்திகள் தேடி வரும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.