காதல் முயற்சி வெற்றி பெறும், வீடு கட்டும் யோகம் உண்டு!

49

காதல் முயற்சி வெற்றி பெறும், வீடு கட்டும் யோகம் உண்டு!

ஜூன் 07 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (07-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: கல்யாண யோகம் உண்டு. காதல் வயப்படுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷபம்: தன லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் உண்டு. ஆன்லைன் வர்த்தகம் அமோகமாக இருக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பூமி யோகம் உண்டு. விஞ்ஞானிகளுக்கு பேரும், புகழும் கிடைக்கும்.

மிதுனம்: மர்மங்கள் நிறைந்த ஒரு நாளாக இந்த நாள் இருக்கும். அறிவாற்றல் கூடும். மன தைரியம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்ய ஏற்ற காலம். வியாபாரத்தில் முதலீடு அதிகம் செய்வீர்கள். செல்வ செழிப்பு உண்டு. பூமி யோகம் உண்டு.

கடகம்: நல்ல நாள். தன பெருக்கு உண்டு. குரு மங்கள யோகம் கூடி வரும். கந்த குரு கவசம் படிக்க வேண்டும். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வியாழன் தோறும் வழிபட வேண்டும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.

சிம்மம்: ரொம்ப அருமையான நாள். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. ஊரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத் தூய்மை முக்கியம். அனுகூலமான நாள். செல்வ, செழிப்பு உண்டாகும்.

கன்னி: வெளிநாட்டு யோகம் உண்டு. செல்வ, செழிப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக மிக அருமையான நாள். கல்யாண தடைகள் விலகும். விநாயகர் வழிபாடு செல்வ, செழிப்பு உண்டாக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. வங்கி கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: வேலை வாய்ப்பு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும். அரசு வழி ஆதரவு உண்டு. கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். அரசியலில் புகழ் உண்டு.

தனுசு: வெளிநாட்டு யோகம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். வீடு கட்டும் யோகம் உண்டு.

மகரம்: பொறுமையாக இருக்க வேண்டும். குரு மங்கள யோகம் உண்டு. பழைய சொத்துக்களை விற்க முயற்சிப்பீர்கள். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: மிக நல்ல நாள். வேலை கிடைக்கும். வாக்கு வன்மை உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அன்கூலமாக முடியும். நெருங்கிய தோழிக்கு நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்: இந்த நாள் அருமையான நாள். பொருளாதார தடைகள் விலகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல தன லாபம் உண்டு. குடும்பத்தில் வாக்கு வாதம் வரும்.