காதல் வயப்படும் நாள், வீடு கட்டும் யோகம் உண்டு!

61

காதல் வயப்படும் நாள், வீடு கட்டும் யோகம் உண்டு!

ஜூன் 20 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (20-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பணம் சம்பாதிக்க ஆசை வரும். வேலையிலிருந்த சிக்கல் தீரும். பேச்சில் சாமர்த்தியம் உண்டாகும். அலுவல் நெருக்கடி இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. கடனுதவி கிடைக்கும்.

ரிஷபம்: உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பேச்சில் சாமர்த்தியம் உண்டாகும். வியாபார விருத்தி உண்டாகும். அலுவலகத்தில் நெருக்கடி இருக்கும். நண்பர்களிடத்தில் பகைமை கூடாது.

மிதுனம்: இந்நாள் பொன்னாள். ஆன்லைன் பிஸினஸ் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. நல்ல வரன் அமையும். திருமணம் நிச்சயமாகும். கூட்டத்தை தவிர்ப்பது நல்லது. தொட்ட காரியங்கள் துலங்கும் அற்புதமான நாள்.

கடகம்: மனதை தளரவிடக் கூடாது. சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக நேரம் செலவிட வேண்டும். வெற்றிகரமான நாள். பயணங்களை தவிர்ப்பது நல்லது. காலி பகுதியில் அடிபட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: குதூகலமான நாள். வெளிநாட்டு வாய்ப்பு கை கூடி வரும். செலவுகள் அதிகமாக இருக்கும். மதிப்பு, மரியாதை உயரும். பெண்களுக்கு மிக அருமையான நாள்.

கன்னி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், நினைத்த சம்பளம் இல்லை என்று சொல்ல கூடாது. உடல்நலனில் அக்கறை தேவை. மனைவி மீது கோபம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நல்ல நாள். ஏராளமான நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சியான நாள். காதல் வயப்படுவீர்கள். காதலை வெளிப்படுத்துவீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. ஆரஞ்சு பழம் சாப்பிட உடல் நலனில் மாற்றம் உண்டாகும். திருமண ஜாதகம் பார்ப்பதில் கவனம் தேவை. வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: அருமையான நாள். நல்ல பதவி கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. வீடுகளில் பழுது நீக்கும் பணி வரும். வியாபாரிகளுக்கு வியாபார தொடர்பு விரிவடையும்.

தனுசு: காதல் வயப்படும் நாள். அன்பை வெளிப்படுத்துவீர்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. வீடு கட்டும் ஆசை நிறைவேறும். வீடு வாங்கும் யோகம் உண்டு. பண வரத்து நன்றாக இருக்கும்.

மகரம்: தனம் தரும் நாள். சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட வேண்டும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு.

கும்பம்: இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். உடல்நலனில் பாதிப்பு வரும். எதிரிகளை பற்றிய சிந்தனை மேலோங்கும். நல்ல தன லாபம் உண்டு.

மீனம்: குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். புதிய பதவி கிடைக்கும். இடமாற்றம் உண்டு. முருகப் பெருமான் வழிபாடு எல்லா நன்மைகளும் உண்டு. தன பிராப்தி உண்டு. காசு, பணம், துட்டு வரும். கழுத்துப் பகுதியில் பிரச்சனை வரலாம். வியாபாரிகளுக்கு வியாபார தொடர்பு விரிவடையும்.