காலத்திற்கும் பயன்படும் வகையில் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்!

61

காலத்திற்கும் பயன்படும் வகையில் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 28 ஆம் தேதியான இன்றைய (28-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: முக்கியமான நாள். வேலை பார்க்கும் இடங்களில் அனுசரித்து செல்ல வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வேலையை விடும் எண்ணம் தோன்றும். மின் சாதனங்களில் கூடுதல் கவனம் வேண்டும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்: யாரையும் கடுமையாக பேசக் கூடாது. தன வரவு தடைகள் நீங்க விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். மனதிலிருந்த கஷ்டங்கள் மறையும். திருமணம் குறித்து நல்ல தகவல் தேடி வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்: உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். வியாபார வெற்றிக்காக கடன் வாங்குவீர்கள். வேலை மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்று முறை மூலமாக வெற்றி காண்பீர்கள். தந்தை வழி உறவுகளின் உடல் நலனில் அக்கறை வேண்டும். அரசு அதிகாரிகளை விமர்சிக்க கூடாது.

கடகம்: மன சஞ்சலங்கள் தோன்றும். சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி பெருகும். மனதில் உள்ள கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் வெற்றிகளை பெற்று தரும். தியானம் செய்ய வேண்டும்.

சிம்மம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பெற்ற பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள். தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். வீட்டை பராமரிப்பு செய்யும் எண்ணம் மேலோங்கும். பொறுமை வேண்டும்.

கன்னி: சொத்தை விற்கும் போதும், வாங்கும் போதும் கவனம் வேண்டும். அரசு வேலை குறித்து நல்ல தகவல் வரும். திருமணம் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: தடைகளை தகர்த்தெறியும் நாள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். தாயாரது உடல் நலனில் அதிக அக்கறை தேவை. வியாபார முயற்சிகள் வெற்றி பெறும்.

விருச்சிகம்: இறைவனை வழிபட வேண்டும். உடல் நல பாதிப்பு இருக்கும். மறைமுக எதிரிகள் தொல்லை இருக்கும். கழிவு உறுப்புகளில் சிலருக்கு பிரச்சனை வரும். சுற்றுப்புற சூழலிலும் அக்கறை காட்ட வேண்டும்.

தனுசு: நினைத்தது நிறைவேறும். வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும். பார்வதியை வழிபட வேண்டும். ராஜ ராஜேஸ்வரியை வழிபட வெற்றி வந்து குவியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் செய்யும் உதவி மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அலுவலக பிரச்சனை தீரும்.

மகரம்: அதிக லாபம் உண்டு. போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். அதி வேகம் ஆபத்தை தரும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். தன லாபம் அதிகரிக்கும். வியாபார லாபம் கூடும்.

கும்பம்: முயற்சி செய்து கொண்டே வேண்டும். வியாபாரத்தில் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: நன்மைகள் அதிகம் நடக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும். இறைவனின் அனுக்கிரகம் உண்டு. நல்ல பதவிகள் தேடி வரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.