காலில் அடிபடுவதற்கு வாய்ப்பு உண்டு: துலாம் ராசி டிசம்பர் மாத பலன்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் டிசம்பர் மாத ராசி பலன்கள் 2021….
துலாம் ராசிக்கான டிசம்பர் மாத ராசி பலன்:
துலாம் ராசி அன்பர்களுக்கு நல்லதொரு மாதமாக அமைகிறது. வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வீர்கள். ஆடை அணியும் போதும், காலணிகள் அணியும் போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். காலில் அடிபடுவதற்கு வாய்ப்பு உண்டு. தோல் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: துலாம் ராசி – ஆங்கில மாத ராசி பலன் 2021 வீடியோ தொகுப்பு!
கல்வி தொடர்பாக கொஞ்சம் பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். படிப்பு தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள். படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்று அவசியமும் உண்டாகும். வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
எதிர்மறை எண்ணங்கள் இருக்க கூடாது. வாக்கில் தைரியம் இருக்கும். நல்ல பதவிகள் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையில் அனுசரித்து செல்ல வேண்டும். மனைவி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் படிக்க வைக்க வேண்டும். நல்ல குழந்தை பாக்கியம் உண்டாகும். துலாம் ராசி பெண்கள் சுய பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.