காலையில் கம்முன்னும், மாலையில் ஜம்முன்னும் இருக்கலாம்!

57

காலையில் கம்முன்னும், மாலையில் ஜம்முன்னும் இருக்கலாம்!

ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம்: வரவுக்கேற்ற செலவும் இருக்கும். குடும்ப முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபார சீரமைப்புக்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

ரிஷபம்: அலுவலகத்தில் தடைபட்டிருந்த பதவி உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிக்கும், உங்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு நிறைந்த தன லாபம் ஏற்படும். கடந்த கால கஷ்டங்களுக்கு இன்று காலம் மருந்து போடுகிறது.

மிதுனம்: வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப நலன் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி பெறும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். மனைவியின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் வர தொடங்கும்.

கடகம்: மாலை பொழுது மிகவும் அருமையான பொழுது. காலையில் கம்முன்னு இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் மாலையில் தான் எடுக்க வேண்டும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. தர்ம காரியங்களுக்கு மட்டுமே கொடுக்கலாம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: அருமையான நேரம். எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். அடுத்தவர்களின் அந்தரங்க, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது. கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வியாபாரத்தில், அலுவலகத்தில் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கன்னி: வேலையில் நல்ல பொறுப்பு வந்து சேரும். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களை சோதிப்பதற்கான பதவி. வியாபாரத்திற்கு கடனுதவி கிடைக்கும். வங்கி மேனேஜரின் கருணை இருக்கும்.

துலாம்: வியாபாரத்தில் நன்றாக இருக்கும். உடல் நல பிரச்சனைகள் தீரும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். நல்ல தனலாபம் உண்டு. படபடப்பு இருக்கும்.

விருச்சிகம்: பொறுமையாக செயல்பட்டால் வெற்றி உண்டு. உயர் பதவி, பொறுப்புகள் தேடி வரும். காவல் துறையாளர்கள் உயர்வு பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் சாதிப்பீர்கள். எழுத்தாளர்கள் புகழ் பெறுவீர்கள்.

தனுசு: குல தெய்வ வழிபாடு சிறந்தது. வியாபாரத்தில் அருமையான லாபம் உண்டு. இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். அருமையான காலம். எடுக்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

மகரம்: குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகள், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று முதல் வியாபாரத்தில் நல்ல செய்திகள் வரும். மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பிறருக்கு சாதகமாக முடியும். தேக ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: நல்ல நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வெளியுலக தொடர்பு அதிகமிருந்தால் அவர்களுக்கு அனுபவங்கள் கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். புதிய நபர்களை நம்பி வியாபாரத்தில் இறங்க கூடாது. பிறரின் வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். நல்ல தனலாபம் உண்டு.

மீனம்: மிகச்சிறந்த வெற்றிகள் கிடைக்கும். பல மாற்றங்களை சந்திப்பீர்கள். வாழ்க்கையில் ஒருபடி உயர்வதற்கு வழிவகை கிடைக்க கூடிய நாள். வியாபாரிகளுக்கு ஏற்றுமதி விற்பனை கூடி வரும். மார்பக நோய் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வாய்ப்பு கூடி வரும்.