காலையில் கம்முன்னு இருக்க வேண்டும்!

101

காலையில் கம்முன்னு இருக்க வேண்டும்!

செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்றைய (12-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 12 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காலையில் கஷ்டம் இருக்கும். மாலையில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு உண்டு. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். யாரையும் விமர்சிக்க கூடாது. தன லாபம் உண்டு.

மகரம்: குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. பொழுதுபோக்கு விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: மனம் மகிழ்வான செய்திகள் தேடி வரும் நாள். வியாபாரத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் நிம்மதி என்று இருக்கும். மிகச் சிறந்த வெற்றிகள் தேடி வரும்.

விருச்சிகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். வேலை மாற்றத்திற்கான சிந்தனைகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொட்ட காரியங்கள் துலங்கும் நாள்.

துலாம்: இனிமையான செய்திகள் மாலைப் பொழுதில் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். காலை நேரத்தில் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதூர பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தன வரவு பெருகும். அக்கம் பக்கத்தினரால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நாள். குடும்பத்தில், வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

கடகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரம் வளர்ச்சியடையும்.

ரிஷபம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். முருகப் பெருமானின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். குல தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

மேஷம்: காலை நேரத்தில் செய்தால் வெற்றி கிடைக்கும். மாலையில், மௌனமாக இருக்க வேண்டும். முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட வேண்டும். உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும்.

https://www.youtube.com/watch?v=cA5ZRNu9k8k