காலையில் கம்முன்னு இருந்தால், மாலையில் ஜம்முன்னு இருக்கலாம்!

40

காலையில் கம்முன்னு இருந்தால், மாலையில் ஜம்முன்னு இருக்கலாம்!

செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்றைய (28-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 28 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இதமான ஒரு நாள். மகிழ்ச்சியான ஒரு நாளாக அமையும். சிறுதூர பயணங்களில் வெற்றி கிடைக்கும். சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். உங்கள் எழுத்துக்கு ஒரு மதிப்பு. பெண்கள் சுய பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

கும்பம்: வெற்றிக்காக உழைக்க வேண்டும். மனம் தளராமல் உழைப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும் நாள். எந்த தோல்வியையும் வெற்றியாக மாற்ற முடியும். பெண்களுக்கு மனமகிழ்ச்சியான ஒரு நாள். சிந்தனையாளர்களுக்கு வெற்றி உண்டு. புதிய வேலை கிடைக்கும்.

மகரம்: உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் வரலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விமர்சனமும், கண்டனமும் கூட வரலாம். ஆகையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன லாபம் உண்டு. தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: வேலை வாய்ப்பு அமையும். வெளிநாட்டு முயற்சிக்கு மாலை நல்ல நேரம். வியாபாரம் செழிக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். காலையில் வெற்றி குவியும். மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். வெற்றியான செய்தி வந்து சேரும். கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம் போன்ற சிந்தனைகள் பெருகும்.

துலாம்: மதிக்கத்தக்க மனிதர்கள். சுபமான, வெற்றிகரமான நாள். காலையில் கம்முன்னு இருந்தால், மாலையில், ஜம்முன்னு இருக்கும். ஆகச் சிறந்த நாள். தன வரவு உண்டு. எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும். கலைஞர்களுக்கு மிகுந்த ஏற்றம் வரும் நாள். அரசுப் பணியாளர்கள் தங்களது பணியில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றியைக் காணக் கூடிய நாள். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். கல்வியில் முன்னேற்றமான ஒரு நாள். பெண்களுக்கு ஆகச் சிறந்த நாள். உத்திரம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பொறுமை காப்பது அவசியம்.

சிம்மம்: தன லாபம் வரும். மனதில் மகிழ்ச்சி வரும். பெற்ற பிள்ளைகளின் உதவி கிடைக்கும். வயதில் மூத்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சாமர்த்தியத்தால் அதிக லாபம் ஈட்டுவீர்கள். திருமண வரன் அமையும். வெற்றிகரமான நாள்.

கடகம்: பழகக் கூடியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனக்குழப்பம் இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். வீடு கட்டும் முயற்சி கை கூடும். வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்: எல்லா ஆற்றலும் உண்டு. படிக்க படிக்க அறிவு வளரும். வெற்றிகள் வந்து சேரும். கடனுதவி கிடைக்கும் நாள். அளவான நன்மைகளுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: தன லாபம் உண்டு. சொத்து, சுகம் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு நல்ல ஞாபகத் திறன் இருக்கும். பெண்களுக்கு சுகமான நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். தந்தை வழி உறவுகளால் நன்மை. உடல் நலனில் அக்கறை வேண்டும்.

மேஷம்: உழைப்பிற்கு முன்னுதாரணமே இந்த ராசிக்காரங்க தான். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் வரலாம். கால பைரவரை வழிபட வேண்டும். எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும்.

https://www.youtube.com/watch?v=juPxCO3X4LQ