காவல் துறையினரால் தண்டனை கிடைக்கும்!

113

காவல் துறையினரால் தண்டனை கிடைக்கும்!

செப்டம்பர் 02 ஆம் தேதியான இன்றைய (03-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 03 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: வீடு வாங்கும் முயற்சியிருந்தால் வெற்றி பெறும். பட்டம் பெறும் முயற்சி வெற்றி பெறும். தாய் வழி உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வியாபார தொடர்பு வெற்றி பெறும்.கழுத்து வலி நிவர்த்தியாகும்.

கும்பம்: அரிப்பு, பிறப்புறுப்பில் சிறு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். தன லாபம் உண்டு.

மகரம்: உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. தேவையான கடனுதவி கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அரசு வழி அதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். காவல்துறையினரால் தண்டனை வரலாம்.

தனுசு: காலைப் பொழுது மகிழ்ச்சியாக, நன்மைகள் பெருகும் ஒரு நாள். காலையில் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி உறவு இதமாக அமையும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபாரம், கல்வி நல்ல முன்னேற்றம் தரும்.

விருச்சிகம்: கவனமாக செயல்களை செய்ய வேண்டிய நாள். தாயாரின் மனதறிந்து செயல்பட வேண்டும். தாயாரின் உடல் நலனில் கவனம் வேண்டும். வியாபாரம் நன்றாக அமையும்.

துலாம்: வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். பிள்ளைகள் வளர்ப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுய ஜாதகம் அறிந்து வியாபாரம் செய்ய வேண்டும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: குடும்பத்தில் வருத்தங்கள் இருக்கும். திருமண உறவு குறித்து முக்கியமான முடிவு எடுப்பீர்கள். மனதிற்கு பிடித்தவரை மணமுடிக்க அற்புதமான தருணம். சிலருக்கு அடிவயிறு பிரச்சனை இருக்கும். தன லாபம் உண்டு.

சிம்மம்: தந்தை வழி உறவுகளால் நன்மைகள் நடக்கும். அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் ஏற்றம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் புகழ் பெறுவார்கள். அரசு வேலைக்கும் முயற்சிக்கலாம்.

கடகம்: எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். சகோதர வழி உறவு நன்றாக அமையும். மனைவி வீட்டாருக்கு உங்களது உதவி தேவைப்படும். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை.

மிதுனம்: பலரது வாழ்த்துக்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் இதமான வெற்றிகள் உண்டு. அலுவலகத்தில் பேரும், புகழும் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

ரிஷபம்: முன்னேற்றமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். மகன் அல்லது மகளின் திருமணம் குறித்து சிந்திப்பீர்கள். கல்வியில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு மனமகிழ்ச்சியான நாள்.

மேஷம்: பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்வான நாள். வியாபார வளர்ச்சியில் நல்ல லாபம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்திலிருந்த தொல்லைகள் விலகும்.

https://www.youtube.com/watch?v=36K46XyeZos