கிண்ணிமங்கலம் சித்தர் கோயிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்!

36

கிண்ணிமங்கலம் சித்தர் கோயிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்!

ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (10-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அருமையான நாள். குடும்பத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்யலாம். கர்ம தோஷத்திற்கு கூட பரிகாரம் செய்து கொள்ளலாம். புதிதாக தொழில் தொடங்க ஆசை வரும். சகல விசயங்களும் அனுகூலமாகும். வங்கி சேமிப்பு உயரும். வேலைமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அனுகூலமான நாள்.

ரிஷபம்: ஆறுதலான சூழல் உண்டு. கணவர் உங்கள் சொல்படி நடப்பார். கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். சுபகாரியங்கள் கூடி வரும். முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.

மிதுனம்: மாணவர்கள் கருத்தூன்றி படிக்க வேண்டும். அனுகூலமான நாள். பிஸினஸ் எண்ணம் மேலோங்கும். அலுவலகத்தில் சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

கடகம்: வெற்றிகரமான நாள். வேலையில் பதவி உயர்வு உண்டு. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: நல்ல நாள். மிகச்சிறந்த வெற்றிகள் உண்டு. பிஸினஸ் லாபம் உண்டு. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தகவல் தொடர்பு துறையில் வேலை கிடைக்கும். ஆகச்சிறந்த நாள்.

கன்னி: ஹோமங்கள் செய்ய வேண்டிய நாள். வாழ்க்கையிலுள்ள பிரச்சனைகள் எல்லாம் தீரும். பாசிட்டிவ் எனர்ஜி இருக்க வேண்டும். தடைகள் விலகும். பொருளாதார ரீதியாக உயர்வு வரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நல்ல வேலை வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கும். வழக்கறிஞர்களுக்கும் முன்னேற்றமான நாள். பல் மருத்துவர்களுக்கு ஏற்ற நாள். வியாபாரிகளுக்கு வசந்தமான நாள். நன்மைகள் அதிகம் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள்.

விருச்சிகம்: நல்ல உத்தியோகம் உண்டு. விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்ல வேண்டும். தொலை தூர செய்திகள் வாழ்க்கையை உயர்த்தும். பட்டங்கள், பதவிகள் தேடி வரும். சமுதாயத்தில் நல்ல கௌரவம், அந்தஸ்து அமையும். பெண்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை. வெளிநாட்டு யோகம் கூடி வரும்.

தனுசு: மருத்துவம் படிப்பவர்களுக்கு உயர்வான நாள். மாற்று மருத்துவம் பயிற்சி பெறுபவர்களுக்கு வருமானம் உயரும். கோபங்களை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வரும். என்ன தடை வந்தாலும், வெற்றி வாகை சூட மதுரை கிண்ணிமங்கலம் சித்தர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

மகரம்: மிக அருமையான நாள். தொழில் மாற்றம் ஏற்படும். இளைஞர்களுக்கு வேலை மாற்றம் உண்டு. நகை வாங்கும் யோகம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: நல்ல நாள். மேன்மைகளை உருவாக்கித் தருவார். நாளை ஆவணி அவிட்டம். இறைவழிபாடு செய்ய தொட்டது துலங்கும். கண்களில் பிரச்சனை வரலாம். வியாபாரத்தில் வெற்றி உண்டு. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி தொடர்பு உண்டாகும். மீடியா அன்பர்களுக்கு வெற்றிகரமான நாள்.

மீனம்: முன்னேற்றகரமான தினம். மிகச்சிறந்த வெற்றிகள் உண்டு. பதவி உயர்வு கிடைக்கும். நல்ல வேலையும் உண்டு. வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆகச்சிறந்த நாள்.