கீழே பணம் கிடந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்: தனுசு நவம்பர் மாத ராசி பலன்!
நவம்பர் மாத ராசி பலன் தனுசு ராசி….
நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆங்கில மாதமான நவம்பர் மாத ராசி பலன்கள் 2021…
தனுசு ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்…
ராசியில் சுக்ர பகவான் இருக்கிறார். ஒருவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால் மகாலட்சுமி அனுக்கிரகம் வேண்டும். சுபிட்சம், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வேண்டுமென்றால் மகாலட்சுமியின் அனுக்கிரகம் இருந்தால் எல்லாமே நடக்கும். ஒரு குடும்பத்தில் பெண் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுக்ர பகவானின் அனுக்கிரகம் ஒரு பெண்ணிற்கு இருக்குமேயானால், வாழ்க்கை மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க: தனுசு ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு:
மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க கிடைக்க நமது வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும். வேதங்கள் மகாலட்சுமியின் பெருமைகளை பேசுகிறது. தனுசு ராசிக்கார்ர்களுக்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க கூடிய ஒரு நேரம். மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க கூடிய இந்த நேரத்தை தனுசு ராசியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக கண் முன்னால் பணம் கிடந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2021 – வீடியோ தொகுப்பு!
தனுசு ராசிக்கார்ர்களுக்கு பல வழிகளிலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு வரும். பார்த்து, அந்த வழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வீட்டில், பஞ்ச முக தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும். சுக்ர பகவானின் அனுகூலத்தினால் தனுசு ராசிக்கார்களுக்கு நிறைய தன வருமானம் வரும். இரண்டாம் இடத்தில் சனி பகவானும், குரு பகவானும் இருக்கிறார்கள். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் மாதம் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இது தனுசு ராசிக்கு 3ஆவது இடம்.
மேலும் தெரிந்து கொள்ள: குரு பெயர்ச்சி பலன் தனுசு ராசி!
ஏற்கனவே குடும்ப ஸ்தானத்தின் சனி பகவான் இருந்து பேச்சுக்களில் பிழை வந்துவிடுகிறது. குரு 3ஆவது இடத்திற்கு சென்று அமர்வது, பேச்சுக்களில் வெற்றியைக் கொடுக்கும். திருமணமாகி தாம்பத்திய வாழ்க்கை சரியில்லாமல் போன தனுசு ராசிக்காரர்களுக்கு அதற்கான காலகட்டம் இது. விடிவு காலம் பிறப்பதற்கான ஒரு நேரம். தாம்பத்திய வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் பலருக்கும் குழந்தை பாக்கியம் அமையவில்லை. இப்பொழுது, அந்த தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். https://www.youtube.com/watch?v=-IBE2lUuj10&t=675s
பத்தாம் இடத்திற்கு அதிபதியாக இருக்க கூடிய குரு பகவான் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வைக் கொடுப்பார். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு இருந்த பிரச்சனையெல்லாம் நிவர்த்தி செய்து கொடுப்பார். புதன் பகவான் அந்த அனுகூலத்தைச் செய்து கொடுப்பார். https://www.youtube.com/watch?v=-IBE2lUuj10&t=675s
வேலை மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கூடி வரும். திருமணச் செய்தி தேடி வரும். சிலருக்கு தூக்கமில்லாமல் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். எப்படிப் பார்த்தாலும் வியாபாரத்தில் வெற்றி, கல்வியில் முன்னேற்றம், குடும்பத்தில் சிறப்பு, பெண்களுக்கு யோகம் என்று இருக்ககூடிய ஒரு மாதமாக இந்த நவம்பர் மாதம் இருக்கும். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல அதிர்ஷ்டங்களை கொண்டு வந்து தரப்போகிறது.