குடும்பத்தில் ஜெயிக்க முடியாதவர்களால் வெளி உலகத்தில் ஜெயிக்க முடியாது!

105

குடும்பத்தில் ஜெயிக்க முடியாதவர்களால் வெளி உலகத்தில் ஜெயிக்க முடியாது!

டிசம்பர் மாதம் 08 ஆம் தேதியான இன்றைய (08-12-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (டிசம்பர் 08 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: வாழ்க்கையில் சாதிக்க கூடிய அற்புதமான நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். தன லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்: நிதானமாக செயல்பட வேண்டும். புதிய காரியங்களை தொடங்க கூடாது. தவறான முடிவு எடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் போட கூடாது. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. அளவான நன்மை உண்டு. வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும்.

கடகம்: அன்பாக பழக வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு உண்டாகும். பொறுமை அவசியம். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. ஆசிரியர்கள் பெருமை கொள்வார்கள்.

சிம்மம்: அருமையான நாள். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். பதவிகள், பட்டங்கள் வந்து சேரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அருமையான நாள். தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் நல்ல நாள். பண வரவு உண்டாகும். குடும்பத்திற்கு நல்ல நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: யாரையும் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: கருத்துக்களை வெளிப்படுத்தினால் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு உண்டாகும். தொட்டது துலங்கும் நாள். அழகு சாதனங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

தனுசு: அருமையான நாள். வரப்போகும் ஆண்டு, அருமையான ஆண்டு. தன வரவு உண்டு. குடும்பத்தில் சண்டை, சச்சரவு இருக்கும். அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் ஜெயிக்க முடியாதவர்கள், வெளி உலகத்தில் ஜெயிக்க முடியாது. புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்திலிருந்த சிக்கல் தீரும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: அருமையான நாள். நெருக்கடி, படபடப்பு உண்டாகும். வேலை பார்க்கும் இடங்களில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வம்பு, வழக்குகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல நிம்மதி உண்டு.

கும்பம்: உடல் நலனில் அக்கறை வேண்டும். ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். எதிர்பார்க்கும் மாற்றம் கிடைக்கும். எதையும் மௌனமாக இருந்து சமாளிக்க வேண்டும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

மீனம்: தொட்ட தெல்லாம் வெற்றி பெறும். கல்வியில் வெற்றி. வியாபாரத்தில் வளர்ச்சி. பூர்வ புண்ணியத்தில் வெற்றி. பிள்ளைகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும். சகல காரியமும் நன்மையாக முடியும்.