குடும்பம் தான் முக்கியம்: மேஷ ராசி செப்டம்பர் மாத ராசி பலன்!

219

குடும்பம் தான் முக்கியம்: மேஷ ராசி செப்டம்பர் மாத ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் செப்டம்பர் மாத ராசி பலன்கள்…

மேஷ ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்….

பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் தலைமை தாங்கும் பண்பைப் பெறுவார்கள். அரசியலில் தலைமை வகிக்க கூடியவர்கள் பெரும்பாலும் மேஷ ராசிக்காரர்களாகவே இருப்பார்கள். தனியார் துறையிலும் இது போன்று தான் இருப்பார்கள்.

மேலும் படிக்க: மேஷ ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு

முற்பிறவியில் நீங்கள் தலைவராக இருந்து செய்த நன்மைகள், உங்களது பெற்றோர் செய்த புண்ணியங்கள் ஆகியவற்றிற்கு இப்பொழுது பலன் கிடைக்கும். பலருக்கு நல்ல பொறுப்புகள் வந்து சேரும். அரசு துறையோ அல்லது தனியார் துறையோ பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். ஒருபுறம் புகழ், பதவி உயர்வு என்று இருந்தாலும் மற்புறம், வேலையில் வேலைப்பளு அதிகரிக்கும்.

தாய், தந்தையின் உடல்நிலையில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செய்ய வேண்டும். வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்ய வேண்டாம். கருத்து மாறுபாடுகளை வெளிப்படுத்தக் கூடாது. புதிய வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்ய வேண்டாம்.

ஒருவேளை வேலையை இழந்துவிட்டீர்கள் என்றால், உங்களது சொந்த ஜாதகத்தில் என்ன தசா புத்தி நடக்கிறது, கிரகத்தின் தன்மை என்ன என்பது தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். சிவராஜ யோகம் உண்டாகும். அற்புதமான காலகட்டம். உயர் பதவிகள் தேடி வரும். பேச்சில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அதிக கவனமாக பேச வேண்டும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரும். வீண், வாக்குவாதங்கள், சண்டை போட தோன்றும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரும். காரமான, சூடான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மனைவி வழி சொந்தங்களால் பல நன்மைகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வரம் தேடி வரும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். புதுமையை விரும்பக் கூடியவர்களுக்கு அற்புதமான காலகட்டம். தன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும், குடும்பத்தின் மீது செலுத்தும் கவனம், உறவுகளின் மீது எடுத்துக் கொள்ளும் கவனம் இந்த மூன்று மட்டுமே இருந்தால் வாழ்க்கை சமமாக சென்று கொண்டிருக்கும்.

பெண்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அந்த குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்காக நேரத்தை செலவிட மாட்டேன், அலுவலகத்திற்காக மட்டுமே நேரத்தை செலவிடுவேன் என்று சொன்னால், வாழ்க்கையை தொலைத்துவிட்டோம் என்று அர்த்தம்.

எல்லா விஷங்களையும் குடும்பத்திற்காக செய்கிறீர்கள். மாணவர்களை பொறுத்த வரையில் போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு அற்புதமான மாதம். வியாபாரிகளுக்கு நிறைய போட்டி, பந்தயங்களை சமாளிக்க வேண்டி வரும். இல்லத்தரசிகளுக்கு ஏற்றம் தரக்கூடிய காலகட்டம். இது பொதுபலன்கள் மட்டுமே. சரியான பலன்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரவர் ஜாதகத்தில் தசா புத்தி, சூட்சமம் இதன்படி தான் எல்லாம் நடக்கும்.