குடும்ப பிரச்சனை தீர பைரவரை வழிபட வேண்டும்!

120

குடும்ப பிரச்சனை தீர பைரவரை வழிபட வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… மார்ச் 04 ஆம் தேதியான இன்றைய (04-03-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: புதிய வேலை வாய்ப்பு தேடலாம். இருக்கும் வேலையை சிலர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பொருள் வரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு.

ரிஷபம்: யோகமான நாள். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். பொருள் வரவு உண்டு.

மிதுனம்: மனைவி வழி உறவினர்களால் நன்மை உண்டு. பொருள் வரவு உண்டு. நல்ல உத்தியோகம் கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும் அற்புதமான நாள்.

கடகம்: குடும்ப பிரச்சனை தீர பைரவரை வழிபட வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் உள்ள சங்கடங்கள் தீரும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: நிதானம் தேவை. அமைதியாக இருக்க வேண்டும். இனிப்பு பொருட்கள் சேர்க்க கூடாது. தோஷங்கள் நீங்க பசுக்களை பராமரிக்க வேண்டும்.

கன்னி: மகிழ்ச்சியான நாள். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்டகரமான நாள்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: கண்களில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா வெற்றிகளும் தேடி வரும் அற்புதமான நாள்.

விருச்சிகம்: எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடி வெற்றி பெறும். உத்தியோகம் கிடைக்கும். பதவியும் தேடி வரும். மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து நடக்க வேண்டும்.

தனுசு: புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வண்டி, வாகனம் வாங்க யோகம் வரும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஏராளமான நன்மைகள் தேடி வரும்.

மகரம்: யோகமான நாள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தைரியமான நாள். கடன் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

கும்பம்: பொருளாதார உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்: மதுரை மீனாட்சி, சங்கரன் கோயில் கோமதி அம்மனை நினைத்து வழிபட வேண்டும். நெருக்கடிகள் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டு.