குபேர யோகம் வரும்: துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

181

குபேர யோகம் வரும்: துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் துலாம் ராசி – வீடியோ தொகுப்பு!

துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குபேர யோகத்தை கொடுக்க இருக்கிறது. குரு பகவானின் பார்வையானது உங்களது ராசி மீது விழுகிறது. கும்ப ராசியில் அமரக்கூடிய குரு பகவான் துலாம் ராசிக்காரர்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆவது ஸ்தானத்தில் அமர்கிறார். ஐந்தாவது ஸ்தானத்தில் குரு பகவான் அமர்கிறார் என்றால், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். https://www.youtube.com/watch?v=WAo7_NyRndM

ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால், அவனுக்கு உழைப்பு அவசியம். அந்த உழைப்போடு அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் வாழ்க்கையில் மள மளவென்று உயர்வார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக் கூடியது வாழ்க்கையில் மிகச் சிறந்த அதிர்ஷ்டத்தை உண்டாக்கி தரும்.

உங்களது ஜாதகத்தில் 9ஆவது ஸ்தானம் பொக்கிஷம். அதனை இப்போது திறக்கப் போகும் சாவி என்னது என்று கேட்டால், அது தான் குரு பகவான். இந்த குரு பகவானின் பார்வையானது 9ஆவது ஸ்தானத்தின் மீது விழுகிறது. கும்பத்தில் இருக்கும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையினால் பாக்கிய ஸ்தானத்தை பார்க்கிறார். நித வாழ்க்கை வாழ்வதற்கு நாம் என்ன பாக்கியம் செய்தோமோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அமையப் போகிறது. https://www.youtube.com/watch?v=WAo7_NyRndM

பாக்கியமான அனுபவம், மிகச்சிறந்த வெற்றிகள் வந்து சேரும். உயர் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், பல தடைகள் இருந்த து. அது இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். உயர் கல்வியை வெற்றிகரமாக படித்து முடிப்பீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும், இப்பொழுது சரியாகும் காலகட்டம். பிள்ளைகளால், தந்தைக்கு அதிர்ஷ்டம். https://www.youtube.com/watch?v=WAo7_NyRndM

தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையில் மிக அழகான உறவு மலரப் போகிறது. ராசியை பார்க்கிறார். ராசியை பார்ப்பது என்றால் மேன்மை உண்டாகும். இந்த ராசி பெண்களுக்கு இப்பொழுது உயர்ந்த காலகட்டம். ராசியை குரு பார்ப்பதால் உங்களுக்கு நேர்ந்த அத்தனை அவமானங்களும் மறையப் போகிறது. பெண்களுக்கு வாழ்க்கையில் இருந்த தடைகள் எல்லாம் இப்பொழுது விழகப் போகிறது. திருமண உறவில், புகுந்த வீட்டில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. கணவன் மனைவிக்கிடையில் நல்ல புரிதல் ஏற்படப் போகிறது. அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். சுப காரியங்கள் கூடி வரும். பிதுர் வழி சொத்துக்கள் வந்து சேரும். https://www.youtube.com/watch?v=WAo7_NyRndM