குல தெய்வத்தின் பேரருள் கிடைக்கும்; வாழ்க்கையிலிருந்த சிக்கல் விலகும்!

63

குல தெய்வத்தின் பேரருள் கிடைக்கும்; வாழ்க்கையிலிருந்த சிக்கல் விலகும்!

செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (13-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: நண்பர்கள் விலகிச் செல்வார்கள். வெளிநாட்டு யோகம் கூடி வரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முயற்சியில் தடைகள் இருந்தால் விநாயகர் பெருமானுக்கு பச்சை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

ரிஷபம்: எல்லாம் லாபத்தில் முடியும். செலவுகள் கூடும். உடல் நலனில் அக்கறை தேவை. விநாயகருக்கு அச்சு வெல்லம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். கடன் பிரச்சனை நீங்கும்.

மிதுனம்: யோகமான காலகட்டம். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பிஸினஸில் மாற்றம் உண்டாகும். தடை இருந்தால் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: யோகமான நாள். வெளிநாட்டு வசதி, வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். வீடு வாங்கும் போது தாய் பத்திரத்தை கவனமாக படித்து வாங்க வேண்டும். கல்வியில் கவனம் தேவை. வீட்டிலுள்ள கணபதிக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டும். பச்சரிசி எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிம்மம்: வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். தந்தை வழி சொத்துக்கள் வரும். அலுவலகத்தில் நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய வியாபார சிந்தனை தோன்றும். அக்கத்து வீடுகள், இடங்கள் சொந்தமாகும். சகோதர உறவுகளில் பிரச்சனை இருக்கும். வாழ்க்கை வழமாக வேண்டும். ஓம் விநாயகரே போற்றி என்று எழுத வெற்றிகள் கிடைக்கும்.

கன்னி: அருமையான நாள். காலைப் பொழுது நன்றாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் மாற்றி யோசிக்க வேண்டும். ஓம் விநாயகனே போற்றி என்று சொல்ல வேண்டும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். விநாயகப் பெருமானுக்கு பச்சை நிறத்தில் ஆடை அணிவித்து வழிபட எல்லையில்லா வெற்றி உண்டாகும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்: வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையிலிருந்த சிக்கல் நிவர்த்தியாகும். வேலை வாய்ப்பில் இருந்த பிரச்சனை சரியாகும். மூதாதையர்கள் சொத்துக்கள் தொடர்பாக சிக்கல் எழும். உங்களது உடல் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: குல தெய்வத்தின் பேரருள் கிடைக்கும். விநாயகரை வழிபட வேண்டும். சக்தி கணபதியாக வழிபட வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும்.

மகரம்: இரட்டை பிள்ளையாரை வழிபட வேண்டும். அப்படியில்லையென்றால் இரண்டு விநாயகரை வழிபட வேண்டும். சிறுதூர பயணம் வெற்றி தரும். தன வரவு உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

கும்பம்: குதூகலமான நாள். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி நிலை உயரும். தேக ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை நிவர்த்தியாகும்.

மீனம்: மகிழ்ச்சிக்குரிய நாள். நல்ல தன வரவு உண்டாகும். நல்ல செய்திகள் கூடி வரும். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட வேண்டும். ஏராளமான அளவில் நன்மைகள் நடைபெறும் நாள். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.